Menu
Your Cart

வலிசுமந்த நினைவுகள்

வலிசுமந்த நினைவுகள்
-5 %
வலிசுமந்த நினைவுகள்
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வலி சுமந்த நினைவுகள்' நேர்காணல் தொகுப்பு தமிழீழ விடுதலைக்கான மீள் எழுச்சியின் திறவுகோலாகும்! புராண, இதிகாச கதைகள், இலக்கியங்கள் மற்றும் நூற்றாண்டுகள் முற்பட்ட முந்தைத் தமிழ் மாமன்னர்களின் வீர வரலாறுகளுமே, அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமைப்பட்டு இருந்த தமிழினத்தின் பெருமூச்சாக இதுவரை காலமும் வெளிப்பட்டு வந்த நிலையை புரட்டிப் போட்டதுடன் உலகின் எந்தவோர் மூலையில் பிறந்து வளர்ந்திருப்பினும் தமிழன் என்று தலைநிமிர்த்தி பெருமைகொள்ளும் புதிய வரலாற்றை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டம் மீட்டுருவாக்கம் செய்துள்ளது. உலக போரியல் வரலாற்றில் என்றென்றும் நீடித்து நிலைத்து நின்று தமிழர் வீரத்தை முரசறையும் வகையிலான பல வெற்றிச் சமர்களையும், உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனித்துவத்துடன் மிளிர்ந்து நிற்கும் முப்படை கண்ட வியத்தகு வரலாற்றினையும், உலக வல்லாதிக்க இராணுவ வல்லுனர்களே ஆராய்ந்து அறிந்துகொள்ளத்துடிக்கும் போரியல் நுட்பங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எடுத்து விரிக்கும் பக்கமெல்லாம் தமிழர் பெருமை வியாபித்துள்ளது. அப்பேற்பட்ட வீர வரலாறு ஆயுத மௌனிப்புடன் நினைவுத்தடங்களாக முள்ளிவாய்க்கால் மண்ணில் முகம்புதைத்து நிற்கையில் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த நினைவுகள் மாத்திரமே மீள் எழுச்சிக்கான திறவுகோலாக எம்முன் உள்ளது. அது ஒன்றே நீதிக்கான போராட்டத்தின் இயங்கு விசையாகவும் இருந்து வருகின்றது. தமிழின விடுதலை வேணவாவினை அடைகாத்து நிற்கும் எம் இனத்தின் வலிசுமந்த நினைவுகள் காற்றோடு கலந்து காலாவாதியாகிப் போய்விடக் கூடாதென்ற ஓர்மத்தில் அவற்றை ஆவணத் தொகுப்பாக்கியுள்ளோம். சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகள் தமிழர் தாயகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடத்திய, நடத்திவரும் திட்டமிட்ட இனப்படுகொலைக் குற்றங்களுக்கான நீதியை விரைந்து பெறுவது ஒன்றே சுதந்திர தமிழீழத்திற்கான ஏது நிலையை உருவாக்கும் வழியாகும். அதை நோக்கியதாக உலகத் தமிழர்கள் அனைவரும் பேதமைகள் நீங்கப் பெற்று ஓரணியில் அணியமாவது காலத்தின் கட்டாயமாகும். அந்தவகையில், வலிசுமந்த நினைவுகள் நினைவுத் தொகுப்பின் உள் நுழைந்து வெளியேறும் ஒவ்வொருவரும் நீதிக்கான முன்னெடுப்புகளின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர முடியும். 'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'
Book Details
Book Title வலிசுமந்த நினைவுகள் (Valisumandha Ninaivukal)
Author நிஜத்தடன் நிலவன்
Publisher பார்த்திபன் வெளியீடு (Parthiban Veliyeedu)
Pages 352
Year 2018
Edition 1
Format Hard Bound
Category Eezham | ஈழம், Essay | கட்டுரை, Interview | நேர்காணல், Literature | இலக்கியம், War | போர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha