-5 %
ஒரே நிழல்
₹523
₹550
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வம்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எழுத்தாளனின் மனைவி என்பது ஒரு சாபம். ஒரு வரம். எழுத்தாளனின் உலகியல் பொறுப்பின்மை. கனவுத்தன்மை, உணர்ச்சிநிலையின்மை ஆகியவற்றை அந்த மனைவி சுமக்கவேண்டியிருக்கும். ஆனால் அந்த மனைவிக்கு கொஞ்சம் இலக்கியம் தெரியும் என்றால் தன் கணவனுடன் இலக்கியத்தின் உலகுக்குள் செல்லமுடியும், உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் வாழமுடியும். ரஷ்ய இலக்கிய மேதைகளான தல்ஸ்தோயின் மனைவி சோபியா. தஸ்தயேவ்ஸ்கியின் மனைவி அன்னா, மாண்டில்ஸ்டமின் மனைவி நடேஷ்டா, நபக்கோவின் மனைவி வியரா, பல்ககாவின் மனைவி மார்கரீட்டா, சோல்செனிட்ஸினின் மனைவி நட்டாலியா ஆகியோர் பற்றிய நூல் இது. அலக்ஸாண்டிரா போபாஃப் எழுதிய நூலை நண்பர் சிறில் அலெக்ஸ் கவனமாகவும், நுணுக்கமான குறிப்புகளுடனும் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த மனைவிகளின் உலகம் வழியாகச் செல்லும் இந்நூல் ஒரு மிகப்பெரிய நாவலை வாசிக்கும் உளஎழுச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மகத்தான கதைநாயகியராக திரண்டு வருகிறார்கள். சில இடங்கள் பெரும்புனைகதை போன்றவை.ஒரு புனைவெழுத்தாளனாகிய எனக்கு பலநூறு மானுடத்தருணங்களின் பெருந்தொகுப்பாகவே இந்நூல் தோற்றம் அளிக்கிறது. தமிழுக்கு ஒரு முக்கியமான நல்வரவு இது.
- ஜெயமோகன்
| Book Details | |
| Book Title | ஒரே நிழல் (Ore Nizhal) |
| Author | அலெக்ஸாண்ட்ரா போபாஃப் |
| Translator | சிறில் அலெக்ஸ் (Siril Alex) |
| Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2025 New Arrivals |