Menu
Your Cart

பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 1)

பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 1)
-5 %
பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 1)
அ.முத்துலிங்கம் (ஆசிரியர்), இரா.துரைப்பாண்டி (தொகுப்பாசிரியர்)
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ரசனை பகுதியில் வரும் கட்டுரைகள் பல்வேறு தளங்களை அலசிச் செல்பவை. அது கனடாவில் நிகழும் ஈழத்தின் ‘காத்தவராயன் கூத்து’ எனும் நிகழ்த்து கலையாகட்டும், ரஷ்ய இலக்கிய மேதமைகள் தல்ஸ்தாய் செக்காவ் இருவருக்குமான சந்திப்பில் தல்ஸ்தாய் செக்காவின் ஏனைய படைப்புகளைப் புகழ்ந்துவிட்டு அவரின் நாடகங்களைப் பற்றிச் சொல்கையில் “நீ ஷேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்” என்ற விமர்சனத்தைக் கேட்டவுடன் செக்காவின் மகிழ்ச்சியை விவரிக்கும் பகுதிகள் அழகு மிகுந்தவை. இந்தப் பகுதியின் கட்டுரைகளில் நேர்காணல் பகுதியின் தீவிரத் தன்மை மாறி முத்துலிங்கம் அவர்களின் வழக்கமான பகடி கலந்த எழுத்து நடை இரசவாதம் செய்கிறது. அ. முத்துலிங்கம் விரைவில் அனைத்து மானுட மனத்திலும் இடம் பெறுவார். ஏனெனில் அவர் வெறுமனே எழுதவில்லை… அனைத்து உயிர்களின் மீதான நேசிப்பில் நம்முடன் பேசுகிறார். - இரா. துரைப்பாண்டி
Book Details
Book Title பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 1) (Pakisthan ulavuthuraiyum nanum)
Author அ.முத்துலிங்கம் (A.muthulingam)
Compiler இரா.துரைப்பாண்டி
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா,..
₹214 ₹225
முத்துலிங்கத்தின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஈழத்தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை. வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள் அவர் கதைகளில். ஆனால் தமிழ் வாசகனுக்கு அன்னியப்படாமலும் தீவிரம் சிதைக்கப்படாமலும் முத்துலிங்கம் படைத்திருக்கிறார்...
₹209 ₹220
கொலுத்தாடு பிடிப்பேன்வாய்மொழி மரபின் தனித்தன்மைகளை,எழுத்து மரபின் வசீகரங்களுடன் பிணைத்துப் பயன்படுத்தும் முத்துலிங்கத்தின் மொழி,அவருடைய சிறுகதைகளுக்கென்று ஒரு தனித்த அழகையும் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு புதிய சுவையையும் சேர்ப்பதாக அமைந்தது.பல்வேறு நிலப்பரப்புகள்,மாறுபட்ட பருவநிலைக..
₹570 ₹600
ஆட்டுப்பால் புட்டுஒரு பழுதடைந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்னைக் கொல்லப் போவதாக மிரட்டுகிறாய். என்னைக் கொல்வதால் உனக்கு என்ன பயன்? அடுத்த நாள் உன் ராணுவத்துக்கு வெற்றி கிட்டிவிடுமா? போரை நிறுத்திவிடுவார்களா? என்னைப்போல எத்தனை போராளிகள் இருக்-கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நீ தேடித்தேடிக் கொல்..
₹95 ₹100