Menu
Your Cart

குருவிக் குஞ்சு

குருவிக் குஞ்சு
குருவிக் குஞ்சு
₹55
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புத்தகங்கள் வாசிப்பதற்கானவை மட்டுமல்ல, அவை கையில் வைத்து நீண்ட நேரம் விரும்பிப் பார்ப்பதற்குமானவை. குழந்தைகளுக்கான புத்தகங்களில் ஓவியங்களுக்கும் வடிவமைப்பிற்கும் புத்தகத்தில் உள்ள வெற்றிடத்திற்கும் கதைகளுக்கு இணையான பெரும் மதிப்பு உண்டு. அத்தகைய உணர்விலிருந்து உருவான ரஷ்ய சிறார் கதைப் புத்தகங்களில் ஒன்றுதான் குருவிக்குஞ்சு. மக்சீம் கோர்க்கியின் அதிகம் அறியப்படாத ஒரு வேடிக்கையான கதை. இன்னும் பறக்கத் துவங்காத ஒரு குட்டிக் குருவி தன்னைச்சுற்றி நிகழ்பவைகளைப் பற்றி அம்மாவிடம் பேசும் கதை. நாம் காணும் ஒவ்வொரு குழந்தையையும் போலவேதான் இந்தக் குட்டிக் குருவியும். மனிதர்களை கேலி செய்யும் துணிச்சலை ஒரு சின்னக்குருவிக்கும் வழங்கிவிடுபவனாக இருக்கிறான் கதைசொல்லி. மனிதர்களுக்கு சிறகுகள் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்தக் கதையில் வரும் குட்டிக்குருவியால். அது சிறகுகளைப் பற்றி நிறைய பேசுவதோடு சிறகில்லாத மனிதனைப் பற்றி விளையாட்டாகப் பாடவும் செய்கிறது. மிகச்சிறந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கு மட்டுமானவை அல்ல, அவை எல்லா மனிதர்களுக்குமானவை, மேலும் எக்காலத்திற்குமானவை. சின்னக் குழந்தைகளின் பேச்சையும் இயல்பையும் தனக்குள் வைத்துக்கொள்ள முடிந்ததாலேயே குருவிக்கூட்டத்தைப் போலவே இந்தக் கதையும் மக்களோடு பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகிறது. மக்சீம் கோர்க்கியின் கதைசொல்லலும் அதற்கு இணையான பூ. சோமசுந்தரம் மொழிபெயர்ப்பும் யெ. சருஷின் ஓவியங்களும் சின்னக்குருவியைப் பற்றிய இந்தச் சின்னக்கதையை நமக்குள் அப்படி வாழச் செய்கிறது.
Book Details
Book Title குருவிக் குஞ்சு (kuruvi-kunju)
Author மாக்ஸிம் கார்க்கி (Maaksim Kaarkki)
Publisher குட்டி ஆகாயம் (kuddi agayam)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனித ஆளுமையின் சிதைவுகள்இந்நூலில் கணங்கள் குலங்கள் ஆனதும் குலங்கள் படிப்படியாக மக்கட் கூட்டங்கள் ஆகிச் சமூகமாக அமைந்ததும், சமூகவியல் பார்வையில் விளக்கப்படுகின்றன. இலக்கியத்தின் சமூகப் பின்னணியை ஆய்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி நூல்...
₹33 ₹35
படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள் இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள் இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளில் ..
₹523 ₹550
1906 இல் ரஷ்ய மொழியில் வெளிவந்த இந்த நாவல், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பு நடந்த 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காலத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ரஷ்ய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தந்தையை இழந்த பாவெல் என்ற இளைஞன், புரட்சிகர சித்தாந்தத்தை ஏ..
₹475 ₹500