Menu
Your Cart

கொடை மடம்

கொடை மடம்
-5 %
கொடை மடம்
சாம்ராஜ் (ஆசிரியர்)
₹713
₹750
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித்தாந்தத்தின் நிழலில், சிச்சிறு குழுக்களாய்ச் சிதறிப்போய் இயங்கிக்கொண்டிருந்த தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன இதில் அங்கதமும் கேலியுமாய். பின்புலத்தில், தன் அத்தனை விளக்குகள் வாசனைகளுடன் சந்தடி இரைச்சலுடன் உள்ளும் புறமுமாய் ஓடுவது மதுரை மாநகர். காலத்தின் புழுதி மிதக்கும் அதன் வீதிகளில் இருந்து பாத்திரங்களும் கதைகளும், ஜனரஞ்சகத்தின் பாடல்களும் சாம்ராஜின் துடிப்பும் துடுக்கும் கூடிய மொழிநடையில் கிளைத்துப் பெருகி நிறைகின்றன. துயரும் ஏமாற்றங்களும் கைத்த அபத்தங்களாகத் தோற்றங்கொள்ளும் இப்புனைவில், மையச்சரடாய் விரிகிறது சொல்லப்படாதவொரு விசித்திர காதல்கதை. கூடவே, மேன்மையான கற்பனைகளில் இருந்தும் ஒளிவீசும் நம்பிக்கைகளில் இருந்தும் நிர்த்தாட்சண்யமாய் தரையிறக்கப்பட்டு, ஊர் ஊராக இழுத்துச் செல்லப்படும், லட்சியங்களின் கெடுதேதிக் காலங்களில் ’வயதுக்கு வரும்’ ஓர் இளைஞனின் கதையும்… -கவிஞர் சபரிநாதன்
Book Details
Book Title கொடை மடம் (kodai madam)
Author சாம்ராஜ் (Saamraaj)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 610
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நிலைக் கண்ணாடியுடன் பேசுபவன் - சாம்ராஜ் (சினிமா):கடந்த பத்தாண்டுகளில் வந்த மலையாளச் சினிமாக்களில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படங்களில் சிலவற்றை அவற்றின் அரசியல் / கலாச்சாரப் பின்புலத்தோடு பேச முயல்கிறது இந்தக் கட்டுரைகள்.அந்தரத்தில் வைத்தே ஒன்றை மதிப்பிடுவது ‘நம் வழமை’ மாறாக, அதன் வேரென்ன? விழுதென்ன? ..
₹67 ₹70
பிரசவத்தன்றும் சினிமாவுக்குப் போகும் பெண், இறுதிவரை ஒரு போட்டோவைத் தேடிக்கொண்டேயிருக்கு ஒருத்தி, பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் இன்னொருத்தி, பழித்து ஒதுக்கி வைத்த சொந்தங்களையே தன்னைத் தேடிவரவைக்கும் மற்றொரு பெண் என்று பெரும்பாலான கதைகள் வெவ்வேறு பாடுகளுக்கு நிகராக பகடியோடு இடதுசாரி தோழர்களின் வாழ்வ..
₹95 ₹100