 
                    
                                      -5 %
                                      Out Of Stock
                                  
                          செந்நூல்
                    
          
			
			 
			 
				 
								ம.செந்தமிழன்  (ஆசிரியர்)				 
						
			
            
			
          
                      
          
          
                    ₹114
                 ₹120
                            - Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: செம்மை வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                எண் நூலில் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள் அமைவு பற்றி விளக்கப்பட்டிருந்தது. தனி எனும் கருத்தமைவே ஒன்று எனும் எண்ணென அமைந்து, அவ்வொன்று முடுக்கம் எனும் இயல்புடன் அமைகிறது. இவ்வாறாக ஒன்று முதல் எட்டு வரையிலான எண்களே அவ்வதற்குரிய இயல்புகளுடன் படியெடுத்து வடிவங்களாக விரிகின்றன. அணுவும் அண்டமும் இவ்வெண் கூறுகளின் படிநிலை விரிவுகளே. 
மூலத்திலிருந்து விரியும் எண்வெளி, படிநிலையில் அணுவாகிய அரு உருவங்களென அமைந்த பின், அண்டத்திலுள்ள பரு நிலைப்பொருட்கள் அமைவதற்கிடையிலான மறை செய்திகளை வடிவக் கொள்கை அடிப்படையில் விளக்குகிறது செந்நூல். 
காலம் அசைவதில் வடிவம் அமையத் தொடங்குகிறது. வடிவத்தின் ஆதியும் அந்தமும் இக்காலக் கருத்தமைவினுள் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. வடிவெடுத்த எந்தவொரு பருப் பொருளுக்கும் ஆதி, அந்தம் எனும் எல்லை வரையறை உண்டு. 
எண்கோணமே மூல வடிவம். இம்மூல வடிவம் விரிந்து படிநிலை வளர்ச்சி அடைந்து அறுபக்கச் சதுரமாகிறது. இவ்வறுபக்கச் சதுரமே அண்டத்திலுள்ள அனைத்துப் பருப்பொருள் அமைவிற்கும் ஆதிநிலை வடிவமாகும். முப்பரிமாணம் இப்படிநிலையில் அமைகிறது. 
அனைத்துப் பக்கங்களும் சமம் எனும் பண்பைக் கொண்டது அறுபக்கச் சதுரம். சமம் எனும் பண்பு தனித்தன்மையை அமைப்பதில்லை. விகிதப் பண்பே தனித்தன்மையை அமைப்பது. 
அண்டத்தில் ஒன்றைப் போல் இன்னொன்று இல்லை. ஒவ்வொன்றும் அததற்குரிய இயல்பையும் வடிவத்தையும் கொண்டுள்ளது. சமம் என்னும் பண்பைக் கொண்டதே அறுபக்கச் சதுரம் எனில்  இத்தனித்தன்மை எவ்வாறு அமைகிறது? 
இதற்கான விடையே செஞ்சதுரம் எனும் அடுத்த நிலை வடிவாகும். முப்பருநிலை அளவில் ஓரளவை மாறுபட்டு ஈரளவையென விகிதப்பண்பை அமைக்கிறது. இவ்விகிதம் ஒக்கலும் மிக்கலுமாக தனித்தன்மை கொண்ட வடிவங்களை விரித்தெடுக்கிறது. 
விகிதப்பண்பு கொண்ட செஞ்சதுரம் எனும் வடிவமே செவ்வடிவம் எனப்படுவதாகும். 
செந்நூல் இவற்றினை விரிவாக தெள்ளென விரித்துரைக்கிறது. 
நாம் காணும் ஒவ்வொரு பருப்பொருளின் வடிவ அமைவுக்குப் பின்னும் மறைந்திருக்கும் இலக்கணமே இந்நூல். செந்நூலுடனான பயணம், சிறுகச் சிறுக சிந்தனையில் வடிவங்களை விரித்துக்கொண்டே இருக்கும்.
                              
            | Book Details | |
| Book Title | செந்நூல் (Sennool) | 
| Author | ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan) | 
| Publisher | செம்மை வெளியீட்டகம் (Semmai Publication) | 
| Published On | Jan 2020 | 
| Year | 2020 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் | 
