Menu
Your Cart

தில்லைக் கோவிந்தன்

தில்லைக் கோவிந்தன்
-5 %
தில்லைக் கோவிந்தன்
அ.மாதவையா (ஆசிரியர்), வே.நாராயணன் (தமிழில்), கால சுப்ரமணியம் (பதிப்பாசிரியர்)
₹138
₹145
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மாதவையா எழுதிய தில்லைக் கோவிந்தன் என்ற நாவல், மேலைநாட்டு வாசகருக்காக ஆங்கிலத்தில் Thillai Govindan: A Posthumous Autobiography என்ற தலைப்பில் எழுதப்பெற்றது. 139 பக்கமுள்ள அந்த ஆங்கில நாவலின் (1903) முதல் பதிப்பை, அன்று சென்னையில் பிரபலமாக விளங்கிய ஸ்ரீநிவாச வரதாச்சாரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலேயர் நாட்டில் லண்டனில் பல ஆண்டுகள் கழித்தே அதன் (1916) மறுபதிப்புகூட Thillai Govindan: A Posthumous Autobiography என்ற பெயரிலேயே Thomas Fisher Unwin என்பவரின் லண்டன் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. அதனாலேயே, ஆங்கில இலக்கிய உலகத்தின் கவனத்தையும் இந்திய அளவில் அதிகமான பரவலையும் அந்நாவல் பெற்றது. மேலை வாசகருக்கு இந்த நாவலிலுள்ள அந்நிய தேச நாகரிகமும் கலாச்சாரமும் இந்திய இலக்கியக் கலையின் முன்னேற்ற நிலையும் குறித்தே ஆர்வமும் கவனமும் இருந்திருக்கும். எனவே அங்கும் இந்தியாவிலும் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒருசிலர் இந்த நாவலைப் பொருட்படுத்தி, பாராட்டி எழுதிய மதிப்புரைகளின் தன்மையை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் உருவாகி வரும் வாசகர்களுக்கு இந்த நாவல் எத்தன்மையில் வாசிக்க வாய்த்திருக்கும், எவ்விதச் சலனங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் ஊகிக்க முடிகிறது. அதுவரை இந்தியச் சமூகத்தின் தேசிய எழுச்சியையும் சமய மறுமலர்ச்சியையும் சமய நல்லிணக்கத்தையும் சமூகச் சீர்திருத்தங்களையும் பகுத்தறிவையும் பற்றிப் பேசிய ஆரம்பகட்டப் புனைகதை இலக்கியம், அப்பிரச்சாரங்களைக் கலைத்துவ வடிவிலும் அதை மீறியும்கூட முன்பே படைத்திருக்கலாம். ஆனால் மாதவையாவின் புனைகதைகள் பண்பாட்டு அரசியலின் அபாயகரமான விளிம்புகளில் சஞ்சரித்திருக்கின்றன என்பதும், எனவே பிரச்சார இலக்கியம் என்று முத்திரை குத்தப்பட்டும் சனாதனிகளால் மறைக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் விலக்கப்பட்டும் வந்திருக்கின்றன என்பதையும் அளந்தறிய முடியும். ஆனால், பிரச்சாரம்கூட இலக்கிய அந்தஸ்தை அடையும் என்பதற்கும் உலக இலக்கிய வெளியில் நிறைய உதாரணங்கள் உண்டு என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
Book Details
Book Title தில்லைக் கோவிந்தன் (thillai-govindhan-tamizhini)
Author அ.மாதவையா (A.Maadhavaiyaa)
Translator வே.நாராயணன்
Editor கால சுப்ரமணியம் (Kaala Supramaniyam)
Publisher தமிழினி வெளியீடு (Tamizhini Publications)
Pages 148
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழி: இலக்கியத் தொகுப்பு - கால சுப்ரமணியம் :இந்நூலின்  பொருளடக்கம்:1. உலகின் மிகப் பெரிய சென்சஸ்(இலங்கைச் சிறுகதை) - டி. ராமநாதன் 52. டி.ராமநாதன் மறைவு - பிரமிள் 133. தேவதரிசனம் (போலந்து சிறுகதை)டெட் மேஜர் / தி. ஜானகிராமன் (தமிழாக்கம்) 164. தமிழ் எழுத்துக்களின் தோற்றம், காலம்,வளர்ச்சி - சு. இராசவேல..
₹143 ₹150
இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கி..
₹219 ₹230
தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமாகியிருக்கும் எட்கர் ஆலன் போ, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மல்லார்மே, போரிஸ் பாஸ்டர்நாக் முதலான உலகப் படைப்பாளர்களோடு, ஆஸ்திரேலியக் கவி ஏ. டி. ஹோப், ஆப்பிரிக்கக் கவி அமில்கர் கப்ரல், சீனக் கவி ஸி சுஅன், ஜப்பானியக் கவி டோஸிமி ஹோரியுஷி, மராட்டிய பௌத்தக் கவி பஹ்வான் ..
₹67 ₹70
கள்ளர் மடம்: வாடிவாசல் உள்ளிட்ட 10 கதைகள்..
₹314 ₹330