Menu
Your Cart

மெர்சோ: மறுவிசாரணை

மெர்சோ: மறுவிசாரணை
-5 %
மெர்சோ: மறுவிசாரணை
காமெல் தாவூத் (ஆசிரியர்), வெ. ஸ்ரீராம் (தமிழில்)
₹185
₹195
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பிரெஞ்சு இலக்கியப் படைப்புகளில் மிகவும் பிரபலமாகிவிட்டிருக்கும் முதல் வரிகளில் ஒன்று: ‘இன்று அம்மா இறந்துவிட்டாள்.’ எழுபது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான ஆய்வுகளுக்கும் பல புத்தகங்களுக்கும் ஊட்டமளித்திருக்கும் காம்யுவின் ‘அந்நிய’னின் தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும் ஒரு சுவாரஸ்யமான நாவலை அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுத் 2013இல் (ஆல்பெர் காம்யுவின் நூற்றாண்டு) வெளியிட்டு, பின்னர் 2014இல் பிரான்ஸிலும் வெளியிட்டார். பிரெஞ்சு இலக்கிய உலகில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ‘இன்று அம்மா இன்னும் உயிரோடிருக்கிறாள்’ என்று ‘அந்நியனு’க்கு எதிரொலியாக அமையும் வரிகளுடன் தொடங்கும் இவருடைய எழுத்தின் துணிச்சலும் சவாலும், இவரிடம் காணப்படும் பிரெஞ்சு மொழி ஆளுமையும் பிரான்சில் இவருக்குப் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுத் தந்திருப்பதுடன், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் காரணமாக இருந்திருக்கின்றன. ‘அந்நிய’னின் தொடர்ச்சியான காமெல் தாவுதின் இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னுமொரு சுவாரஸ்யமான தகவல்: பிரெஞ்சு மூலத்தில், ‘அந்நியன்’ புத்தகத்தில் உள்ள மொத்த எழுத்துகள் (நிறுத்தற்குறிகளையும் சேர்த்து) எவ்வளவோ, துல்லியமாக அதே அளவு இந்தப் புத்தகத்தில் இருக்கும்படி காமெல் தாவுத் கவனமாகப் பார்த்து எழுதியிருக்கிறார். அந்நியன் வாசித்தவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல்.
Book Details
Book Title மெர்சோ: மறுவிசாரணை (Merso Maruvisaaranai)
Author காமெல் தாவூத் (Kaamel Thaavoodh)
Translator வெ. ஸ்ரீராம் (V. Sriram)
ISBN 9789382394327
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹133 ₹140
“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும்தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போது, சில சமயங்களில்ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து, நம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும்.ஒரு காட்சியோ, ஒரு வசனமோ போதும், நமக்குத் தைரியம் அளிப்பதற்கு,வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆன..
₹105 ₹110
புத்தகங்களைத் தடைசெய்யும் நாட்டில் மதங்களின் குறைகளைக் காட்டும் புத்தகங்களைத் தடை செய்யும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், சாதிகளைப் பற்றி எழுப்பப்பட்டிருக்கும் கட்டுமானங்களைக் கேலிசெய்யும் திரைப்படங்களை முடக்கும் இன்றைய சமூகச் சூழ்நிலையில், புத்தகங்களையும் படங்களையும் எரிக்க வேண்டும் என்னும் ஒரு ஆணை ச..
₹171 ₹180