Menu
Your Cart

முள்ளால் எழுதிய ஓலை

முள்ளால் எழுதிய ஓலை
-5 %
முள்ளால் எழுதிய ஓலை
உ.வே.சா (ஆசிரியர்), டாக்டர் உ.வே.சாமிநாதையர் (ஆசிரியர்)
₹323
₹340
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின் சுவையான உரையாடல்கள் எவர் ஒருவரும் கொண்டாடக்  கூடியவை. உணர்ச்சிப் போக்கும் உரையாடல் போக்கும் கலந்த நாடகத் தன்மையுடன் கூடிய விவரிப்பு நடையை அவரது எழுத்துக்களில் காணலாம். நேரிடையாகத் தெளிவான மொழியில் எவ்வித அலங்காரமுமின்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவர் காலச்சூழலையும் வரலாற்றுப் பின்புலத்தையும் அறிய முடிவதோடு இன்றும் வாசிப்புத்தன்மை கொண்டு வசீகரிப்பன இக்கட்டுரைகள். 1901இல் சுதேசமித்திரனில் தொடங்கிப் பின்பு தென்னிந்திய வர்த்தமானி, கலைமகள், ஆனந்த விகடன், தினமணி, தாருல் இஸ்லாம் எனப் பல்வேறு பத்திரிகைகளில் கிளை பரப்பியது அவரது எழுத்தாற்றல். வெகுசன ஊடகம் சார்ந்தும் வெற்றி பெற்ற கட்டுரைகள் இவை. சாமிநாதம் (2015) என்னும் நூலின் மூலமாக உ.வே.சா.வின் முன்னுரை களை முழுவதுமாகத் தொகுத்துப் பதிப்பித்த ப.சரவணன் தற்போது அவரது கட்டுரைகளின் மூலத்தைத் தேடிச் சென்று ஒருசேரத் தொகுத்து அவற்றைப் பொருண்மை அடிப்படையில்  பகுத்துச் செம்பதிப்பாக ஆக்கியுள்ளார். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆவணப்படுத்துதலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்திவரும் சரவணன் திருப்பூர் ‘தமிழ்ச்சங்க விருது’, ‘தமிழ்ப்பரிதி விருது’, ‘தமிழ்நிதி விருது’, ‘சுந்தர ராமசாமி விருது’ ஆகியவற்றைப் பெற்றவர். தற்போது சென்னை மாநகராட்சி பள்ளி ஒன்றில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
Book Details
Book Title முள்ளால் எழுதிய ஓலை (Mullal Ezhuthiya Oalai)
Author உ.வே.சா (U.Ve.Saa), டாக்டர் உ.வே.சாமிநாதையர் (Taaktar U.Ve.Saaminaadhaiyar)
ISBN 9789352440269
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 312
Year 2016
Category History | வரலாறு, தமிழர் பண்பாடு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புறநானூறுமுன்றின் முஞ்ஞையோடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழற் கைம்மாள் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப் பார்வை மடப்பினை தழீஇப் பிறிதோர் தீர்தொழிற் றனிக்கலை திளைத்துவிளை யாட-வீரை வெளியனார், புறம்.320..
₹665 ₹700
பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும்..
₹228 ₹240
நினைவு மஞ்சரி..
₹190 ₹200