Menu
Your Cart

தாகங்கொண்ட மீனொன்று: ரூமி

தாகங்கொண்ட மீனொன்று: ரூமி
-5 % Out Of Stock
தாகங்கொண்ட மீனொன்று: ரூமி
₹238
₹250
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ரூமி

ஜலாலத்தீன் முகம்மது ரூமி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி இஸ்லாமியக் கவிஞர், இறையியலாளர். தொழிற்பெயர்களுக்குள் அடங்காத நெகிழ்ச்சியும் இறையன்பும் நிரம்பி வழிந்த வண்ணம் வாழ்ந்து அவற்றைக் கவிதைகளில் அள்ளித் தெளித்தவர். துருக்கியில் ‘மேவ்லானா’ என்றும், இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் ‘மௌலானா’ என்றும், ஆங்கிலம் வழங்கும் பகுதிகளில் ‘ரூமி’ என்றும் அறியப்படும் இவருடைய கவிதைகள் புதிய பாரசீக மொழியில் உள்ளன. இறையன்பும் சமயமும் பெரும்பாலும் தனிப்பட்ட அனுபவங்களே என்னும் புரிதல் ரூமியின் பல கவிதைகளில் நமக்குக் கிடைக்கின்றன. தமது உண்மைக் காதலனாகிய இறைவனைப் பிரிந்திருத்தலால் வரும் துயரும், இறைவனென்னும் காதலனோடு மீண்டும் கலக்க வேண்டிக்கொள்ளும் ஏக்கமும் பிரிவாற்றாமையும் ரூமியின் கவிதைகளில் இழையோடி இருக்கின்றன.
அமெரிக்கக் கவிஞரும் பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான கோல்மன் பார்க்ஸ் 1970 களிலிருந்தே ரூமியின் எண்ணற்ற படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தத் தமிழாக்கம் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பு களைத் தழுவி செய்யப்பட்டிருக்கிறது.

Book Details
Book Title தாகங்கொண்ட மீனொன்று: ரூமி (Roomi)
Author ஜலாலுத்தீன் ரூமி (Jalaaluththeen Roomi)
Translator என்.சத்தியமூர்த்தி (En.Saththiyamoorththi)
ISBN 9780955667466
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 0
Year 2017
Format Hard Bound
Category Sufism | சூஃபியிசம், Islam - Muslims | இஸ்லாம், Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author