New
-5 %
பூனை யூஷ்கா
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Children Books| சிறார் நூல்கள் ,
சிறுவர் கதை ,
2025 New Arrivals
₹19
₹20
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978-81-994111-7-3
- Page: 32
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வீட்டில் தனக்குப் பிடித்த இடத்தில், சோபாக்கள் மேலோ, தரை விரிப்புக்கள் மேலோ, நாற்காலிகள் மேலோ, பியானோவில் சுரக் குறிப்புப் புத்தகங்களுக்கு மேலோ படுத்துத் தூங்கிற்று யூஷ்கா. செய்தித்தாள்களின் மேல் பக்கத்துக்கு அடியில் ஊர்ந்து புகுந்து படுத்துக் கொள்வது அதற்கு நிரம்பப் பிடித்தது. அச்சகத்தின் மையில் பூனைகளின் மூக்குக்கு இனிமையான ஒரு மணம் இருக்கிறது. தவிரவும், காகிதம் குளிருக்கு அடக்கமாகக் கதகதப்பாகவும் இருக்கும்.
வீட்டில் உள்ளவர்கள் விழித்துக் கொள்ளத் தொடங்கியதும் யூஷ்கா முதன் முதலில் கன காரியமாக வருகை தருவது என் அறைக்குத் தான். அதுவும் என் பக்கத்து அறையில் கணீரென்ற குழந்தைக் குரல் ஒலிப்பது அதன் கூர்மையான காதுகளில் பட்ட பிறகே. அழுந்த சாத்தப்படாத கதவை யூஷ்கா மூஞ்சியாலும் பாதங்களாலும் திறந்து உள்ளே வந்து கட்டில் மேல் தாவி என் கையிலோ கன்னத்திலோ ரோஜா நிற மூக்கால் குத்தி, ‘முர்ர்ம்” என்று சுருக்கமாகச் சொல்லிற்று.
| Book Details | |
| Book Title | பூனை யூஷ்கா (Poonai Yushka) |
| Author | அலெக்சாண்டர் குப்ரின் (Aleksaantar Kuprin) |
| Translator | பூ. சோமசுந்தரம் (P. Somasundaram) |
| ISBN | 978-81-994111-7-3 |
| Publisher | ஆதி பதிப்பகம் (Aadhi Publication) |
| Pages | 32 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Children Books| சிறார் நூல்கள், சிறுவர் கதை, 2025 New Arrivals |