Menu
Your Cart

அறுபடும் யாழின் நரம்புகள்

அறுபடும் யாழின் நரம்புகள்
-9 %
அறுபடும் யாழின் நரம்புகள்
அ.வெண்ணிலா (ஆசிரியர்)
₹77
₹85
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நூலின் பின் அட்டையில் பெண்ணியக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் உட்பட 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எனினும் தீவிரமாகச் சிந்திக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் உலகில் உள்ள சகல விஷயங்களையும் பார்க்கிற கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, பழங்காலந்தொட்டே ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களின் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தங்கள் ஆட்சிக் காலத்தில் செய்தவற்றைத் தங்களின் பெயரால் பொறித்து வைத்துள்ளார்கள் என்பதைச் சொல்லும் "வரலாற்றுக் காலம் தொட்டு இப்படித்தான்' கட்டுரை, அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஒன்றும் புதிதில்லை; மன்னர் காலத்திலேயே நிலத்தைத் தானமாக யாருக்கோ வழங்க மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும் "நிலமென்பது வெறும் மண்ணல்ல' கட்டுரை, ஆகம விதிகளின்படி கோயில்களில் வழிபாடு நடக்க வேண்டும் என்று கூறும் "ஆகம நெறியையே நடைமுறைப் படுத்துங்கள்' கட்டுரை, ஆளுக்கொரு வீட்டில் வாழ நினைக்கும் மனப்பான்மையை விமர்சிக்கும் "கனவு இல்லம்' கட்டுரை, நூலாசிரியர் பிறந்த வந்தவாசியைப் பற்றிய கட்டுரை, விளையாடிய தெரு, முதன்முதலில் பணிக்குச் சேர்ந்த பள்ளியைப் பற்றிய கட்டுரை என்று பலவிதமான விஷயங்களை உரத்த குரலில் இந்நூல் பேசுகிறது. எனினும் பெண்களின் பிரச்னைகளை - சமூகம் எவ்விதம் நீதியற்றவகையில் அவர்களைக் கையாள்கிறது என்பதை- சொல்லும் கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு தனிமனித மனோபாவம், நீண்ட காலமாக மேற்கொள்ளப்படும் பழக்கங்களின் தொடர்ச்சி ஆகியவை காரணங்களாக அமைவது போன்ற எண்ணம் நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது.
Book Details
Book Title அறுபடும் யாழின் நரம்புகள் (Arupadum wazhin warampukal)
Author அ.வெண்ணிலா (A.Vennila)
ISBN 9789386274397
Publisher அகநி பதிப்பகம் (Agani Publications)
Edition 1
Format Paper Back
Category பெண்ணியம், கட்டுரை தொகுப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்..
₹450 ₹500
தேர்தலின் அரசியல்‘அரசியல் கட்சிகள் இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய பெண் வெட்பாளர்களை அறிவித்தால் மட்டும் போதாது.அவர்களின் சிதந்திரமான செயல் பாட்டையும் தீர்மானிக்க வேண்டும்.பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும் குடும்பத்தின் பிற ஆண்களை கட்சியில் அனுமதிக்கக் கூடாது.’‘விதை இருக்கிறது,மருந்து இருக்கி..
₹81 ₹90