அம்மா ஒரு கொலை செய்தாள்

அம்மா ஒரு கொலை செய்தாள்

அம்மா ஒரு கொலை செய்தாள்:

வரையறைகளுக்கு அப்பால்...

கனன்று ஒளிவிடும் அம்பையின் கதை எனும் நெருப்பு...

பெண்ணின் முழுப் பரிமாணத்தையும் கதை சொல்பவரின் ஆழ்ந்த கலைத்துவ தரிசனங்களையும் வாழ்க்கையை பிரக்ஞையோடு எதிர்கொண்ட ஒற்றைப் பெண்னொருவரின் சாகசத்தையும் அனுபவங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடையே காணும் உருமாற்றங்களையும் அம்பையின் எழுத்துக்கள் நிகழ்த்துகின்றன


அம்பையின் படைப்புகள்:

கிட்டத்தட்ட – இல்லையில்லை - மிகச்சரியாக அம்பையின் முதல் தொகுப்பு (சிறகுகள் முறியும்-1976) வெளியான நாற்பதாம் ஆண்டு இது. இன்னும் கூறுவதென்றால் அவரது முதல் கதை (“மெட்ராஸ்ல இருந்தப்பதான் ‘சிறகுகள் முறியும்’ எழுதினேன். ரொம்ப காலம் கழிச்சு எழுதின கதை. 67ல எழுதினேன்”) எழுதப்பட்டு ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன.

தன் முதல் தொகுப்பு கதைகளைப் பற்றி அதன் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் அடக்கமானத் தொனியில் அம்பைக் குறைவாகச் சொல்லிக் கொண்டாலும் அவை இலக்கியத்தில் அவர் ஆற்றவிருக்கும் பங்களிப்புக்கான சுவடுகளை சற்று அதிகமாகவே கொண்டிருக்கின்றன. அவரது நிலம் பரந்துபட்டது. ஏனெனில் இந்தக் கதைகள் தமிழகத்தின் நகரங்களிலும் சிற்றூர்களிலும் மட்டுமல்ல, டெல்லி, மும்பாய் , பிற வட இந்திய மாநிலங்களின் கிராமங்கள், முட்டுச் சந்துகள் மற்றும் அந்நிய தேசங்களிலும் நிகழ்பவையாக உள்ளன. அம்பையின் புகழ்பெற்ற அவர் பெயரோடு எப்போதும் சேர்த்து உச்சரிக்கப்படும் சில கதைகளுள் இரண்டு (அம்மா ஒரு கொலை செய்தாள், சிறகுகள் முறியும்) இத்தொகுப்பிலேயே.......

கட்டுரையை முழுமையாக வாசிக்க..இணைப்பைச் சொடுக்கவும்..

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

  • Rs. 325