Menu
Your Cart

அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது

அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது
-5 %
அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது
நிவேதிதா லூயிஸ் (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அம்மாக்கண்ணு யார்? நீலனை ஏன் அவளுக்குப் பிடிக்காது? அப்படி என்ன செய்துவிட்டான் அந்த நீலன்? எதற்காக அம்மாக்கண்ணுவையும் அவள் குடும்பத்தையும் பிரிட்டிஷ் அரசு சிறையில் தள்ளவேண்டும்? அந்தச் சின்னஞ்சிறு குழந்தையைத் தேடி எதற்காகச் சிறைக்கு வந்தார் காந்தி? இந்திய சுதந்திரப் போராட்டம் பல்லாயிரம் பக்கங்களில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது உண்மைதான். ஆனால் அவற்றில் அம்மாக்கண்ணுவின் பெயர் நமக்கு உடனடியாகத் தட்டுப்படப்போவதில்லை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நல்ல தமிழ் நூல்களைக் கண்டறிந்து அச்சேற்றிய வா.வெ.சாஸ்த்ருலுவும் மறக்கடிக்கப்பட்டவர்தான். வ.உ.சியையே யார் என்று கேட்பவர்கள் இருக்கும்போது, தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கிய டாக்டர் தனகோடி ராஜுவை யாரேனும் அறிந்து வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா? தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் மறைந்த போன பல பக்கங்களுக்கு இந்நூலில் உயிரூட்டியிருக்கிறார் நிவேதிதா லூயிஸ். நம் கவனத்தை ஈர்த்து, நம் சிந்தனைகளைக் கொள்ளை கொள்ளும் பல நிகழ்வுகளும் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசியல், சமூகம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் ஒரு சிறு புதையல்.
Book Details
Book Title அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது (Ammakannuvukku Neelanai Pidikkaathu)
Author நிவேதிதா லூயிஸ்
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 208
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Culture | பண்பாடு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை. புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு ..
₹285 ₹300
தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன. - ஆர். பால..
₹257 ₹270
இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி, சிந்து சமவெளி நாகரிகம். சிந்து சமவெளி நம் தொன்மம். நம் அடையாளம். நம் கூட்டுப் பெருமிதம். நன்கு திட்டமிடப்பட்ட சாலைகள், கட்டடங்கள், நீர் மேலாண்மை, தொலைதூர தேசங்களுடனான வணிகத் தொடர்பு, ஆடை அணிகலன்கள், கலை என்று ஒரு பண்பட்ட நாகரிகம் செழித்து வாழ்ந்ததற்கான உயிர்ப்புள்ள..
₹95 ₹100
கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு, முற்றிலும் புதிய பார்வைகளை அளிக்கும் ஒரு கலகப் புத்தகத்தை நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார். இரு பெரும் பகுதிகளில் ஆயிரம் பக்கங்களைக் கடந்து விரிகிறது இந்நூல். தென்மேற்குத் தமிழகத்..
₹1,234 ₹1,299