Menu
Your Cart

ஆண்ட்ரூ க்ரோவ்

ஆண்ட்ரூ க்ரோவ்
-4 % Out Of Stock
ஆண்ட்ரூ க்ரோவ்
S.L.V.மூர்த்தி (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கம்ப்யூட்டர் உலகில் பில் கேட்ஸுக்கு நிகராக பிரமிப்புடன் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர் ஆண்ட்ரூ க்ரோவ். உலகம் முழுதும் உபயோகிக்கப்படும் அத்தனை கம்ப்யூட்டர்களுக்குள்ளும் இருக்கும் Intel சிப் தெரியுமல்லவா? அந்நிறுவனத்தின் முதுகெலும்பு. ஆன்ட்ரூவின் பூர்வீகம் ஹங்கேரி. ஆனால் அவர் வளர்ந்து, வாழ்ந்து, சாதித்த இடம் அமெரிக்கா. சொன்னால் நம்புவீர்களா? ஓர் அகதியாக அமெரிக்காவுக்கு ஓடிவந்தவர் அவர்! கடும் உழைப்பினாலும் புத்திக்கூர்மையினாலும் அவர் கட்டிய கோட்டை ஒரு எட்டணா நாணயத்தைவிடச் சிறிதுதான். ஆனால் எட்டாத உயரத்துக்கு அவரைத் தூக்கிச் சென்று உட்காரவைத்தது! அதுதான் Chip!. பர்சனல் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அதிகரித்தபிறகு அதன் லாபத்தை முழுமையாக அறுவடை செய்த நிறுவனம் Intel. தொடக்கத்தில் கம்ப்யூட்டருக்குத் தேவையான மெமரி டிவைஸ்களை மட்டுமே தயாரித்து வந்த இன்டெல் நிறுவனத்தை Chip தயாரிக்கும்படி வற்புறுத்தியவர் ஆன்ட்ருதான். அப்போது அவர் அந்நிறுவனத்தில் ஓர் ஊழியர் மட்டுமே. சிப் உற்பத்திதான் ஓடும் குதிரை. அதில் பயணிப்பது மட்டுமே லாபகரமானது என்று அவர் முடிவெடுத்தார். இந்த முடிவு இன்டெலை எத்தனை உயரத்துக்குக் கொண்டுபோய் நிறுத்தும் என்று அப்போது யாரும் எண்ணவில்லை. ஆன்ட்ரூவின் கணிப்பு நூறு சதவிகித சத்தியம் எனக் காலம் நிரூபித்தது. ஆன்ட்ரூ இன்டெலின் தலைவரானார். "சிப்' உலகில் ஆண்ட்ரூ க்ரோவ் சந்தேகமில்லாமல் ஒரு தாதா. மாபெரும் நிர்வாகி. மிகப்பெரிய அறிவுஜிவி. வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள்! சாதிக்கும் வெறி நரம்பெல்லாம் புடைக்கச் செய்துவிடும்.
Book Details
Book Title ஆண்ட்ரூ க்ரோவ் (Andrew Grove - Chippukkul Muthu)
Author S.L.V.மூர்த்தி (S.L.V.Murthy)
ISBN 9788183685306
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 143
Published On Nov 2006
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே. நினைத்து பார்த்திருப்போமா? எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா ந..
₹71 ₹75
சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள்வரை வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்-மார்ட்டின் திறப்பு விழாவுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். சிறிய மீனுக்குக் குறி வைத்து பெரிய திமிங்கிலத்தையே வளைத்துப் பிடித்தவர் சாம் வால்ட்டன். அவர் வால்மார்ட் ஸ்டோரை ஆரம்பித்த..
₹95 ₹100
எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலமாகக் கனவு கண்டால் எப்படி இருக்கும்? மாதச் சம்பளம். வருடாந்திர சம்பள உயர்வு. சொந்த வீடு. ஒரு கார். இவை சராசரிக் கனவுகள். அட்டகாசமாக ஒரு ப..
₹171 ₹180
ஒரு நாட்டின் வரலாறு தனி மனிதர்களின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாகத் திகழும் அதிசயம் வரலாற்றில் அபூர்வம். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு, குறிப்பாக இளைஞர்-களுக்கு ஜப்பான் ஒரு முன்மாதிரியாக இருந்து வந்திருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? நூற்றாண்டுகால மன்னராட்சியின்கீழ் ஜப்பான் இருந்த ந..
₹143 ₹150