Menu
Your Cart

அரசூர் வம்சம்

அரசூர் வம்சம்
-5 % Out Of Stock
அரசூர் வம்சம்
இரா.முருகன் (ஆசிரியர்)
₹475
₹500
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ, அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை. இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி, ஒடுக்கி, முன்னும் பின்னும் ஓடச் செய்ய, காலம் காலமாகப் படைப்பாளிகள் முயன்று வந்திருக்கிறார்கள். ‘அரசூர் வம்சம்’ நாவலும் அப்படி ஒரு முயற்சியே. பழைமையில் எதிர்காலத்தின் வித்துகள் இருக்கின்றன என்ற ஒரு மயக்கமான நம்பிக்கையுடன் இயங்கும் நாவல் இது. இந்த மயக்கத்துக்கு முருகனின் மொழி இன்னும் ஊட்டம் அளிக்கிறது. கதையின் சூத்ரதாரிகளாக வரும் பனியன் சகோதரர்கள், காலத்தின் குறியீடுகள். அவர்கள் முன்னும் பின்னும் ஓடி, எதிர்காலத்தின் சின்னங்களை, இறந்த காலத்தில் பதிக்கிறார்கள். இறந்த காலத்தின் எச்சங்களை நிகழ்காலத்துக்கு இழுத்துக் கொண்டு வருகிறார்கள். வாழ்க்கையின் உயிர்த்தலுக்குக் காரணம், நினைவுகள் போடும் உணவே என்பதை இந்த நாவலின் பக்கங்கள் வலியுறுத்துகின்றன. பக்கங்கள் பறக்கும் பக்கங்கள். சினேகாம்பாளின் தகப்பனார் போல, மிதந்து முட்டி மோதிக் கொள்ளும் பக்கங்கள் அல்ல. வேகமாகப் பறப்பவை. - பி. ஏ. கிருஷ்ணன் (முன்னுரையில்)
Book Details
Book Title அரசூர் வம்சம் (Arasur Vamsam)
Author இரா.முருகன் (R.Murugan)
ISBN 9789351351818
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 464
Published On Nov 2003
Year 2005

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மூன்று விரல்..
₹204 ₹215
லண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்த..
₹171 ₹180
ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்..
₹166 ₹175
கவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் முக்கிய மைல்கல். மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்..
₹594 ₹625