Menu
Your Cart

அழிசி பதிப்பகம்

அங்கே இப்ப என்ன நேரம்? அங்கே இப்ப என்ன நேரம்?
-5 %
நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ. முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்க வைக்கின்றன. அவருடைய பார்வை அதிசயமான கூர்மை கொண்டது என்றால் அவருக்குத் தோன்றும் உவமைகள் இன்னும் தன..
₹333 ₹350
காற்றோவியம் காற்றோவியம்
-5 %
இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறு, இசையில் புரட்சி, இசை வெளியீடுகளின் விமர்சனம், நேரில் கண்ட கச்சேரிகளின் விமர்சனம், இசை பற்றிய புத்தகங்களின் விமர்சனம் என்று பலதரப்பட்ட கட்டுரைகளால் நிறைந்தது இந்தத் தொகுப்பு. மொழிமீது கிரிக்கு நல்ல ஆளுமை உள்ளதால் பல சிக்கலான இசை நுணுக்கங்களை அவரால் எளிய மொழியில் விளக்க ..
₹238 ₹250
சியமந்தகம்: ஜெயமோகன் 60 சியமந்தகம்: ஜெயமோகன் 60
New -5 %
ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டும் ஒன்றையொன்று நிரப்பும், தொடும் இடங்களையே இக்கட்டுரைகள் பொதுவாகப் பேசுகின்றன எனச் சொல்லலாம். ஜெயமோகனைத் ..
₹855 ₹900
திருச்சி ஜெயில்
-5 %
சிறையில் இருந்த மனிதர்களை வேடிக்கை கலந்து அறிமுகம் செய்கிறார் கரையாளர். அவருக்கு சிறை என்பதே முகங்களாகத்தான் இருக்கிறது. இந்தச் சுயசரிதைக் குறிப்பின் முக்கியத்துவம் என்னவென்றால் இதில் ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கோட்டுச் சித்திரங்கள் உள்ளன என்பதே. அவர்களில் பலர் இப்போது தடயமே இல்லாமல் வரலா..
₹162 ₹170
நான் கண்ட மகாத்மா
-5 %
அவினாசிலிங்கம் கோவையில் இராமகிருஷ்ணா வித்யாலயம் என்னும் பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார். காந்தியடிகளோடு பயணம் செய்த தி.சு. அவினாசிலிங்கம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவாதிகளில் முக்கியமானவர் இவர். இவருடைய முழுப்பெயர் திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார். ச..
₹162 ₹170
நாரத ராமாயணம் (புதுமைப்பித்தன்)
-5 %
நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இதிகாசமும் கற்பனையும் இணைவது யதார்த்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகத் தான். பெயர்களை வெறும் பாத்திரங்களாகக் கொள்ளாமல் carica..
₹57 ₹60
பொன்னுலகம் பொன்னுலகம்
-5 %
‘உடனிருப்பவன்’ தொகுப்பின் கதைகளைத் தொகுத்தபோது இறுக்கமான மனநிலையிலிருந்து வெளியேறியதான, என் ஆழத்தின் பல சிடுக்குகளைச் சொல்லிவிட்டதான ஓர் எடையின்மை மனதில் தோன்றியது. ஆனால் இத்தொகுப்பின் கதைகளை விட்டு வெளியேறுவது உண்மையில் துயரம் தருவதாக இருக்கிறது. நானே இக்கதைகளின் சிறு தருணங்களை எடுத்து வைத்து அவ்வப..
₹171 ₹180
வாசிகள்
-5 %
ஜெயராமனின் கதைகளின் மிக முக்கியமான குணாம்சம், நிகழ்வுகளை வரிசையாகக் கட்டமைக்காமல் முன்னும் பின்னும் நகர்ந்து போய் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட வாழ்வு முறையிலேயே அவரின் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. நிகழ்வுகள், காட்சிகள், வருணனைகள் என அவர் அடுக்கிக் காண்பிக்கும் அல்லது கலைத்துப்போடும் அழகு அலாதியான..
₹105 ₹110
விசிறி: தொகுக்கப்படாத சிறுகதைகள் விசிறி: தொகுக்கப்படாத சிறுகதைகள்
-5 %
க.நா.சு. வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் இடம்பெறாத கதைகளை இந்நூலில் தொகுத்திருக்கிறார் ராணிதிலக். இந்தக் கதைகளில் க.நா.சு.வின் வழக்கமான கதைகளுடன், விமர்சன அளவிலான கிண்டலும் நக்கலும் கொண்ட கதைகளையும் காணலாம்...
₹119 ₹125
வெயில் பறந்தது
-5 %
மிக மிகச் சாதாரணமான ஒன்றிலிருக்கும் அசாதாரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன மதாரின் கவிதைகள். அறிவார்ந்த பாவனைகள் சிறிதுமின்றி, மிகையின்றி தன் உலகத்தின் மகத்துவங்களுக்குள் அழைத்துச் செல்கிறார். ஊரையே திறக்கும், மூடும் பூக்காரியின் லாவகம் கொண்டிருக்கும் இக்கவிதைகள் விஷேசமான தனிமையை அகத்தே கொண்டவை. "தனிமை..
₹76 ₹80
Showing 1 to 12 of 12 (1 Pages)

Don't want to miss out?