-10 %
பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும்
யமுனா ராஜேந்திரன் (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா ,
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
Essay | கட்டுரை ,
2026 New Releases
₹315
₹350
- Edition: 4
- Year: 2025
- ISBN: 9789347854231
- Page: 258
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சினிமாவின் மீது பற்றும் ரசனையும் கொண்டவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு கொடை. படமெடுத்தவரின் உள்ளிருந்து ஒலிக்கும் இதயத்துடிப்புடன் கூடிய தொனியோடு வெளியிலிருந்து அதே கரிசனத்தோடு இணையும் தேர்ந்த விமர்சகரின் குரல்தான் அதன் காரணம். ஒரு நீண்ட நேர்காணல் எனும் களப்பணியை மையமாக கொண்டு ஒரு மென்மையான அற்புதக்கலைஞனைப் பற்றிய தனி நூல் எழுதுவதெப்படி என்பதற்கு இந்நூல் ஒரு உன்னத உதாரணம். ஆழமான அலசல் கோரும் பொறுமைக்கும் நுண்ணிய அவதானிப்பு வேண்டி நிற்கும் பரந்துபட்ட வாசிப்புடன் கூடிய குவிமைய நோக்கிற்கும் இப்புத்தகம் நற்சான்று. யமுனாவினது எழுத்தின் ஆழ்மனதிலிருந்து பார்த்தோமேயானால் பாலு அவர்களின் கோகிலா, வீடு, மற்றும் யாத்ரா போன்ற படங்கள் அவரது பட்டியல்களையும் மீறி மேலே மிதந்து வருகின்றன. அத்தகைய ஒரு விஷயமே யமுனாவை சினிமாவைப் பற்றி நேர்காணல் மற்றும் கட்டுரைகள் சார்ந்து எழுதும்போதும் கூட ஒரு ஆழ்ந்த ரசிகனின் அகவயத்திலிருந்து விரியும் உணர்வெழுச்சியுடன் கூடிய செறிவுமிக்க அவதானிப்பாளராக, தற்சார்பற்ற ஆய்வாளராக முன்னிறுத்துகின்றது.
மனித உறவின் சிக்கலை முன்னிலைப்படுத்தி யதார்த்த பாணியில் படமெடுத்த ஆர்ட் சினிமாவிற்கும் மைய நீரோட்ட சினிமாவிற்கும் நடுவில் ஒரு மிடில்ட்-ஆப்-த-ரோட் சினிமாவில் நம்பிக்கை கொண்ட இம்மூன்று இயக்குனர்களின் முக்கியமான படங்களும் பாலியல் சார்ந்த சிக்கல்கள் மூலமாக நமது சமூகத்தை அலசுகின்றன. அத்தகைய சிக்கலான உறவுகளை கவிநயத்துடன் தனது இயல்பான கேமராக் கண்களுடன் பார்ப்பதில் பாலு மகேந்திரா அவர்கள் நிகரற்று விளங்குகிறார். அவர் உலகலாவிய பல மேதைகளைப் போல தனது வாழ்விலிருந்தே தனது கவனிக்கதக்க படங்களுக்கான உந்துதலைப் பெற்றார். அவரது சீடர்கள் வரிசையில் இன்று பாலா, ராம், வெற்றிமாறன் மற்றும் சீனு ராமசாமி போன்றோர் பயணித்து வருவது மகிழ்ச்சி.
| Book Details | |
| Book Title | பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும் (balumahendra-kalaiyum-vaazhvum) |
| Author | யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran) |
| ISBN | 9789347854231 |
| Publisher | உயிர் பதிப்பகம் (Uyir Publications) |
| Pages | 258 |
| Published On | Dec 2025 |
| Year | 2025 |
| Edition | 4 |
| Format | Paper Back |
| Category | Cinema | சினிமா, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2026 New Releases |