எல்லோரும் நல்லவராகவே பிறக்கின்றனர், மனிதனே மனிதனைக் கெட்டவனாக்கின்றான் என்று சமூக மற்றும் அரசியல் அறிஞர் ரூசோ தம் நூலில் முதல் வாக்கியமாகக் கூறுவார். ஒவ்வொரு செயலிற்கும் ஒரு பின்னணி இருக்கும். அதனை அறிவது ஆசிரியரது கடமை. வீட்டுப் பாடம் செய்யாதிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். சோம்பல் காரணமாகச் செய்யவில்லை என்று முடிவெடுத்துத் தண்டிப்பது முறையல்ல. இதனைப் பல நிகழ்வுகள் மூலம் மாதவன் நிறுவுகின்றார். - ச.சீ.இராஜகோபாலன்
Your shopping cart is empty!