-5 %
Out Of Stock
சி.ஐ.டி சந்துரு
தேவன் (ஆசிரியர்)
₹314
₹330
- Year: 2008
- ISBN: 9788183689397
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை. ‘சி.ஐ.டி. சந்துரு’, முதல் வரி தொடங்கி கடைசி வரி வரைக்கும் குறையாத விறுவிறுப்புடன் வாசகர்களைக் கட்டிப்போடும்சுவாரசிய-மான துப்பறியும் நாவல். தேவனுக்கே உரித்தான ஓட்டமான நடை, அழுத்தமான வசனங்கள் இந்த நாவலின் சிறப்பு. சாகசம், சாமர்த்தியம், சவால் என பக்கத்துக்குப் பக்கம் எகிறும் எதிர்பார்ப்புபுத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாது.
| Book Details | |
| Book Title | சி.ஐ.டி சந்துரு (C I D Chandru) |
| Author | தேவன் (Thevan) |
| ISBN | 9788183689397 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 0 |
| Year | 2008 |