Menu
Your Cart

வாரன் பஃபட்

வாரன் பஃபட்
-5 %
வாரன் பஃபட்
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது. ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட். சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள். ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து நாலு காசு சம்பாதிக்க நமக்கு முதலில் என்ன தெரிய வேண்டும்? லாபம் தரும் கற்பகத் தரு மாதிரியான கம்பெனிகளின் ஷேர்களைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ன விலையில் ஒரு ஷேரை வாங்கலாம்? அல்லது விற்கலாம்? கையைக் கடிக்காமல் இருக்கும் கலையைக் கற்றுக் கொள்வது? பொருளாதாரச் சூத்திரங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாமல், வரைபடம் வரைந்து தலையைச் சுற்ற வைக்காமல், பட்டியல் போட்டுச் சாகடிக்காமல், ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி கற்றுத் தரும் பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை இது. Do you know how to turn the 100 rupess you have into 100 crores? Study the life of Warren Buffet carefully. And you will be surprised to know that the techniques of heaping money gradually are created from you. The secret of success of this world famous rich man is open. And his life will be totally absorbing. When every one thought that share market was a kind of gambling, it was Warren Buffet who showed the world clearly that it is nothing but a scientific investment and any one can heap money from it. And he did what he said. He entered the share market with just 100 rupees. But today, the total value of the money he has runs to many billion dollars. What shoud we know if at all we want to earn some money from the share market? How to find out those companies which will give us always gainful dividends, like the celestial tree of abudnance? For what price should we buy or sell a share? How to learn the art of not running into losses? This is the succeess story of the share market super star which will not hide behind economical formulas, nor beat about the bush with maps, nor kill us with lists and statistics but will explain to us all as though we are kids.
Book Details
Book Title வாரன் பஃபட் (Warren Buffett - Panakkadavul)
Author செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)
ISBN 9788183683913
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 192
Published On Nov 2006
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போ..
₹380 ₹400
பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்ப..
₹333 ₹350
பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்? எப்படி அதிகரிக்கலாம்? பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி எளிமையான அறிமுகம். பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி ”புதிய தலைமுறை” இதழில் வெளிவந்து பரவலாக பயனளித்த தொடரின் நூல் வடிவம். எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றோ இருக்கும் பணமே போதும் என்றோ சொல்பவ..
₹119 ₹125