Menu
Your Cart

நாலு வரி நோட்டு

நாலு வரி நோட்டு
-5 %
நாலு வரி நோட்டு
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹352
₹370
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழர்கள் பாடல்களோடு வளர்கிறவர்கள், பாடல்களில் திளைக்கிறவர்கள், பாடல்களை ரசித்து அனுபவித்துப் பாராட்டுகிறவர்கள். அவர்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதற்காகவே இங்கு பல இசையமைப்பாளர்களும் பாடகர்களும் கவிஞர்களும் மிகச் சிறந்த படைப்பூக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள், கேட்கக் கேட்கச் சுவை கூடும் ஆயிரக்கணக்கான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். ஆனால், திரைப்படப் பாடல் வரிகள் என்பவை வெறுமனே மெட்டுக்கு நிரப்பப்பட்ட சொற்கள் என்கிற எண்ணமும் இங்கு பலருக்கு இருக்கிறது. 'சும்மா மானே, தேனேன்னு எதையாவது எழுதி நிரப்பிடுவாங்கய்யா' என்று அலட்சியமாகச் சொல்கிற பலரை நாம் பார்த்திருக்கிறோம். உண்மையில், மொழியை அப்படி அக்கறையின்றிக் கையாண்டால் அது இத்தனை இதயங்களைத் தொடாது. ஒவ்வொரு பாடலாசிரியரும் ஒவ்வொரு வரிக்கும் கொடுக்கிற உழைப்பும் முனைப்பும் அந்தப் பாடல்கள் நம் மனத்தில் சென்று சேர்வதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று. அந்தவிதத்தில் தமிழ்த் திரையுலகம் கொடுத்துவைத்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்ற சிறந்த பாடலாசிரியர்கள் நமக்காக எழுதியிருக்கிறார்கள், தமிழை வளப்படுத்தியிருக்கிறார்கள். என். சொக்கனின் இந்த நூல், தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக்கொண்டு பல சுவையான விஷயங்களை ரசனையுடன் பேசுகிறது. இலக்கணம், இலக்கியம், பண்பாடு, வரலாறு, அறிவியல்... உள்ளே வாருங்கள், 'சினிமாப் பாடல் வரிகளுக்குள் இத்தனை சுவையா!' என்று வியந்து நிற்பீர்கள்.
Book Details
Book Title நாலு வரி நோட்டு (Naalu vari nottu)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Songs | பாடல்கள், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185