Menu
Your Cart

உடலுக்குள் ஒரு ராணுவம்

உடலுக்குள் ஒரு ராணுவம்
-5 %
உடலுக்குள் ஒரு ராணுவம்
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய குழப்பங்கள் ஏராளம். கரோனா வைரஸ் எப்படியானது, அது பரவும் விதம், பாதிப்புகளின் வீரியம் எப்படியானது எனப் பல கேள்விகள் நிலவின. அரசு சார்பில் அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், மிகச் சிக்கலான அந்த மருத்துவப் பிரச்சினையை எளிய தமிழில் சொல்வதற்கு மருத்துவர் கு.கணேசன் போன்ற மருத்துவ நிபுணர் தேவைப்பட்டார். கணேசன் மருத்துவர் மட்டுமல்ல; புனைவெழுத்திலும் அனுபவம் கொண்டவர். மருத்துவம், சுகாதாரம் தொடர்பான உயர் தொழில்நுட்பப் போக்குகளை எளிய உதாரணங்களுடன் பள்ளி மாணவர்களுக்கும் புரியும் மொழியில் எழுதும் அரிய சான்றோரில் ஒருவர். இயல்பான ஒப்புமைகளுடன் இவர் எழுதும் எந்த ஒரு புதிய விஷயமும், ஒரே வாசிப்பில் உங்கள் சிந்தையில் இடம்பிடித்துவிடும். இந்து தமிழ் திசையின் கருத்துப் பேழை, இணைப்பிதழ்கள், செய்திப் பக்கங்கள் என இவரது கட்டுரைகளும் கருத்துப் பதிவுகளும் இடம்பெறாத பகுதிகளே இல்லை எனலாம். அந்த வகையில், ‘காமதேனு’ வார / மின்னிதழில் இவர் எழுதிய ‘உடலுக்குள் ஒரு ராணுவம்’ தொடர் தமிழ் வாசிப்புலகில் மிக மிக முக்கியமானது. வெளியானபோதே ஒவ்வொரு வாரமும் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றது. நோய்க்கிருமிகளின் வடிவம் குறித்த எளிய உதாரணங்கள், மனித உடலில் நுழையும் கிருமிகளை எதிர்கொள்ள உடலில் இயல்பாகவே அமைந்திருக்கும் ‘ராணுவ’ அமைப்பின் செயல்பாடுகள், மருந்துகள் - தடுப்பூசிகள் உள்ளிட்டவை நோய்க்கு எதிராகச் செயல்படும் விதம், நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள், எதிரணுக்கள், நுண்ணுயிரிகள், தடுப்பாற்றல் மண்டலம், பெரியம்மை, சின்னம்மை, போலியோ, எய்ட்ஸ், எபோலா உள்ளிட்ட நோய்களின் தன்மை, மனிதர்களின் ஆயுள்கால அதிகரிப்பிலும் உடல்நலப் பாதுகாப்பிலும் தடுப்பூசியின் பங்களிப்பு என மருத்துவ மொழியால் அத்தனை எளிதில் விளக்க முடியாத பல நுணுக்கங்களை நம் சரளமான வாசிப்புக்கு விருந்தாக இவர் படைக்கும் விதம் தனித்தன்மையானது.
Book Details
Book Title உடலுக்குள் ஒரு ராணுவம் (udalukkul oru raanuvam)
Author டாக்டர் கு.கணேசன் (Doctor K.Ganeshan)
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வணிகத்துறையாக மருத்துவத்துறை மாறியிருக்கும் இச்சூழலில் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நோய்கள் மனிதர்களை தாக்கிக் கொண்டிருக்கின்றன. எப்படி குணமாவது என்று தெரியாமல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் குழப்புவதற்கு என்றே அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், அது, இத..
₹190 ₹200
‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. மனித உடல் குறித்த மருத்துவ அறிவியலை எளிமையான மொழியில் எடுத்துரைக்கிறது. பள்ளிப் பாடங்களில் கற்றுக்கொள்ளும் அடிப்படைகளை மேலும் சில தப்படிகள் உயர்த்தும் நூல்...
₹143 ₹150
மருத்துவ சந்தேகங்களுக்கு எங்கே பதில் கிடைக்கும் என்று தேடுவோம். அப்படிப் பரவலாகவும் பொதுவாகவும் தோன்றும் மருத்துவப் பிரச்சினைகளுக்கு பதில் தரும் புத்தகம் இது...
₹181 ₹190