Menu
Your Cart

ஏன்? எதற்கு? எப்படி (பாகம் 1)

ஏன்? எதற்கு? எப்படி (பாகம் 1)
-5 %
ஏன்? எதற்கு? எப்படி (பாகம் 1)
சுஜாதா (ஆசிரியர்)
₹342
₹360
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்’’ என்றார் சுஜாதா. பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்ஞானம் பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்று முடிவானது. அதுவே கேள்வி _ பதிலாக உருவெடுத்தது! வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி_க்கு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இந்தப் பகுதி. ‘‘ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது! லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது’’ என்று சுஜாதாவின் தனி ‘டச்’, நுட்பமான விஷயங்களை எளிதில் புரியவைத்த எழுத்துத் திறமை ஆகியவையும் சேர்ந்துகொண்டதால் ஜூ.வி_யின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் ஆர்வத்தோடு இந்தப் பகுதியைப் படித்து ரசித்தார்கள். இந்தக் கேள்வி _ பதில் பகுதியைத் தொகுத்து ஆங்கில புத்தகங்களுக்கு இணையாக மிகச் சிறப்பான முறையில் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வண்ணம் கொடுத்து விசேஷமான விளக்கப் படங்களைத் தேடித் தேடி எடுத்து இந்தப் புத்தகத்துக்கு உருவம் கொடுத்த அசகாய சாதனையைச் செய்தவர் என் மதிப்புக்குரிய மதன். அவருக்கும் புத்தகத்துக்குக் கம்பீரமான அமைப்பை ஏற்படுத்தித் தந்த மணியம் செல்வனுக்கும் என் தனிப் பாராட்டுகள்! தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் புத்தகத்தின் ஐந்தாவது பதிப்பில், ‘ஜூனியர் போஸ்ட்’ பத்திரிகையில் சுஜாதா எழுதிய ‘அதிசய உலகம்’ கேள்வி _ பதில்களையும் தேர்ந்தெடுத்து இணைத்து புதிய பொலிவுடன் சமர்ப்பிப்பதில் பெருமைப்படுகிறேன்.
Book Details
Book Title ஏன்? எதற்கு? எப்படி (பாகம் 1) (En )
Author சுஜாதா (Sujatha)
ISBN 9788189936099
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Category பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல புத்த..
₹181 ₹190
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும்' என்று தோன்றிய நிமிடம், நான் தொலைபேசியில் அவரது எண்ணைச் சுழற்றிவிடுவேன். ஒருமுறைகூட அவர் மறுத்ததில்லை. உடனே கிளம்ப..
₹380 ₹400
காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்க..
₹356 ₹375
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும்..
₹209 ₹220