- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
மாத்ருபூமி இதழில் தொடராக எழுதப்பட்டு வெளிவந்த மீசை கடும் எதிர்ப்பைச் சந்தித்த போது நடுவில் நிறுத்தப்பட்டது. பின்னர் டி.சி. புக்ஸ் இதனை நூலாக வெளிக் கொணர்ந்த போது 2018 இல் எதிர்பாராத பெரும் வரவேற்பைப் பெற்றது கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது தவிர ஜே.சி.பி பரிசையும் வென்றது இந்நாவல். சிறுகதைப் படைப்பாளியான, திரைக்கதை ஆசிரியரான, மொழிபெயர்ப்பாளரான ஹரீஷின் முதல் நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
“சாதியச் சமுதாயப் படி நிலைக் கட்டமைப்பில் கடைக் கோடியில் இருக்கும் ஒருவன் மீதான ஒவ்வாமையால் அச்சமூகம் அச்சமுற்று அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகக் கற்பித்து அவனை அழிக்கத் துடிக்கும் மனநிலையில் பொதிந்துள்ள சாதியக் கட்டமைப்பு விதிகளைக் காவல் காக்கும் ஆதிக்க மனப்பான்மை நாவல் நெடுகிலும் கூர்மையான எள்ளலுக்கு உள்ளாகிறது.”
என்று நாவலின் சாரத்தைப் பிழிந்து வைக்கிறார் மொழிபெயர்ப்பாளர் மோ. செந்தில்குமார்.
| Book Details | |
| Book Title | மீசை (Meechai) |
| Author | எஸ். ஹரீஸ் (Es. Harees) |
| Translator | மோ. செந்தில் குமார் (Moa. Chenthil Kumaar) |
| Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |