இனிப்பு(சர்க்கரை நோயிலிருந்து விடுதலை) - ம.செந்தமிழன் :
'சர்க்கரை நோயை எவராலும் குணப்படுத்தவே முடியாது. மருந்துகளை நம்பித்தான் ஆக வேண்டும்' என்ற அலோபதியின் பொய்வாக்கு முறியடிக்கப்பட்டு விட்டது. ''எனக்கு சர்க்கரை நோய் இருந்தது; இப்போது நலமடைந்து விட்டேன்'' எனக் கூறும் மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டுள்ளது. இதைப் படிக்கும் போதே உங்களுக்குள் நிம்மதியும் அமைதியும் பிறக்கிறது அல்லவா. இவ்வாறு சர்க்கரையில் இருந்து விடுதலை அடைந்த மக்களைக் காணும் போதும். அவர்களுடன் உடையாடும் போதும் எனக்குளும் நிம்மதியும் அமைதியும் பரவுகிறது, ஒரு சாத்தானின் சாபம் முறியடிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.