
-5 %
இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வார்த்தைக்கு வார்த்தை தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சொல்லிக்கொண்டிருக்கும் அப்பா இப்போது மகன் பேச்சைக் கேட்டு ராஸ்கலை வளர்ப்பது பற்றி அதிகமாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், அகிதா இனு ஜாதி நாய்கள் மிகவும் அபாயகரமானவை. யாராவது வீட்டுக்குள்ளே வந்தால் குதறித் தள்ளி விடும். சில நாடுகளில் அகிதா இனு நாய் வளர்ப்பதைத் தடை செய்து வைத்திருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட அகிதா இனு நாயை ஒரு இதய நோயாளியான அப்பா வளர்ப்பதும் மானுட வாழ்வின் அபத்தங்களில் ஒன்றுதானோ? சரி, கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். இப்போது எனக்கு எட்டு வயதாகிறது. இன்னும் ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ. சாகும் வரை எனக்குப் பிடித்த உணவுப் பலகாரங்களைத் தின்றுகொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. தனிமனித சுதந்திரம் பற்றி எவ்வளவோ எழுதும் மை டியர் அப்பா, நாய் சுதந்திரத்தையும் கொஞ்சம் பேணக் கூடாதா? எனக்கு இட்லிதான் உயிர். ஆனால் இட்லியை யாரும் கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார்கள். சாப்பிடுவதைக்கூட ஒளித்து ஒளித்துதான் சாப்பிடுகிறார்கள். இது முறையா, தர்மமா, சொல்லுங்கள்.
- நூலிலிருந்து...
Book Details | |
Book Title | இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும் (Inspector Senbagaramanum Thiruvallikeni Tasmacum) |
Author | சாரு நிவேதிதா (Charu Nivedita) |
Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, 2025 New Arrivals |