Menu
Your Cart

ஜூலியஸ் சீசர்

ஜூலியஸ் சீசர்
-5 %
ஜூலியஸ் சீசர்
ஜனனி ரமேஷ் (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகின் மிகச் சிறந்த ராணுவ ராஜதந்திரியாகவும் மதிநுட்பம் கொண்ட அரசியல் தலைவராகவும் இன்றளவும் ஜூலியஸ் சீசர் திகழ்கிறார். ஜூலியஸ் சீசர் தனது அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளத் தொடங்கியபோது ரோமாபுரி கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இருந்தது. உள்நாட்டுப் போர்களும் குழு மோதல்களும் அதிகாரப் போட்டிகளும் உச்சத்தில் இருந்தன. எதிரி யார், நண்பன் யார் என்று பிரித்துப் பார்க்கமுடியாதபடி சூதும் வஞ்சகமும் பொறாமையும் சீசரை எந்நேரமும் சூழ்ந்துகொண்டிருந்தன. இந்த நிலையிலும் சீசர் கனவு காண்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. அலெக்சாண்டரைப் போல் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியமைக்க அவர் விரும்பினார். சர்வ அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக்கொண்டு, ரோமாபுரியின் எல்லைகளை விரிவு படுத்தி, எதிரிகளை அடிபணிய வைத்து வரலாற்றின் போக்கை மாற்றியமைக்க விரும்பினார். அசாத்தியமான இந்தப் பெருங்கனவைப் படிப்படியாகத் திட்டமிட்டு நனவாக்கினார் சீசர். ரோமானியக் குடியரசு பிரம்மாண்டமான ரோம சாம்ராஜ்ஜியமாக உருப்பெற்றது. ஒரே சமயத்தில் குடிமக்களிடையே பெரும் மதிப்பையும் எதிரிகளிடையே பெரும் அச்சத்தையும் சீசரால் தோற்றுவிக்க முடிந்தது. அதற்கு சீசர் கையாண்ட அரசியல், ராணுவ வழிமுறைகள் அவரை உலகின் மகத்தான தலைவராக அடையாளப்படுத்தியது. ஜனனி ரமேஷின் இந்தப் புத்தகம் ஜூலியஸ் சீசரின் அசாதாரணமான வாழ்வையும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் வண்ணமயமான வரலாற்றையும் ஒருங்கே விவரிக்கிறது
Book Details
Book Title ஜூலியஸ் சீசர் (Julius Caesar 545)
Author ஜனனி ரமேஷ் (Janani Ramesh)
ISBN 9789384149437
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 136
Year 2015
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகம் முழுவதிலும் உள்ள திபெத்தியர்களின் ஆன்மிக குருவாகவும் அரசியல் தலைவராகவும் திகழும் தலாய் லாமா, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் ஓர் அகதியாக வாழ்ந்து வருகிறார். அகிம்சையை, அன்பை, சகோதரத்துவத்தை, அமைதியை விடாப்பிடியாகப் போதித்துவரும் அவர் வாழ்வில்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்!..
₹109 ₹115
முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அபார-மானவை. அசா..
₹214 ₹225
நீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் ஒரு புதிய மாநிலத்தின் கதை...
₹95 ₹100
சர்ச்சைக்குரிய போர். கடும் விமர்சனங்களையும் விவாதங்களையும் எழுப்பிக் கொண்டிருக்கும் புத்தகம். நடுநிலையுடன் பதிவுசெய்யப்பட்ட போர் ஆவணம். முதல் முறையாகத் தமிழில். இந்திய வரலாற்றில் இன்றுவரை சர்ச்சைக்குரிய ஆண்டாக 1962 நீடிக்கிறது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய சீனப்போர் ஏன் தொடங்கியது? ஏன் இந்..
₹513 ₹540