Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் | Juvenile Justice Act

சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் | Juvenile Justice Act
-5 % Out Of Stock
சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் | Juvenile Justice Act
₹190
₹200
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனெனில், ஒரு குழந்தை குற்றமுறு மனநிலையை கொண்டிருக்கவில்லை. ஆதலால், நல்லது எது, கெட்டது எது என்று அவர்கள் செய்கின்ற செயல்களின் விளைவு பற்றியும் குழந்தைகளுக்கு தெரியாது. எனவே, குழந்தைகளின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி, அவர்களை தண்டனைக்குள்ளாக்க முடியாது. எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே! என்ற பாடல் குழந்தையைப் பற்றிய மிகப்பெரிய புரிதலை நமக்கு அளிக்கிறது. எனவே, சமுதாயச் சூழலில், பெரியவர்கள் செய்கின்ற செயல்களும் குழந்தைகளுக்கு இயல்பான பாதிப்பை ஏற்படுத்துவதால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ குழந்தைகள் செய்யும் எந்தச் செயலும், குற்றமுறு மனநிலையை கொண்டிருக்காது. எத்தகைய கடுமையான அல்லது கொடூரமான குற்றச் செயல்களை குழந்தைகள் செய்தாலும், அவர்களை பெரியவர்களுக்கு சமமாகப் பாவித்து, விசாரணைக்கு உள்ளாகி, தண்டனைக்குள்ளாக்கச் செய்வது முறையான நீதிபரிபாலனம் ஆகாது குழந்தைகள் தவறு செய்தால், அவர்களுக்கு சிறை தண்டனை வழங்காமல், சவுக்கடி கொடுத்துவிடும் வகையில் சட்டம் 1860இல் இயற்றப்பட்டது. 1860ஆம் வருடம் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 82இன்படி 7 வருடங்கள் வயதைப் பூர்த்தி செய்யாத குழந்தை, எந்தக் குற்றச்செயலை செய்தாலும், அக்குழந்தைக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு சட்டப்பிரிவு 83இன்படி 7 முதல் 12 வருடங்கள் வயது உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, அவர்களின் குற்றச் செயல்களுக்கு அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது உகந்ததா அல்லது இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும் .1861 மற்றும் 1898இல் இயற்றப்பட்ட குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 298, 399 மற்றும் 562 களின்படி குழந்தைகளை விசாரிப்பதற்கு, தனி சரத்துக்கள் ஏற்படுத்தப்பட்டன. 1876இல் 16 வருடங்களைப் பூர்த்தி செய்யாத குழந்தைகளுக்காக சீர்திருத்தப் பள்ளிகள் சட்டமும், 16 முதல் 18 வருடங்கள் வயதுள்ள குழந்தைகளுக்கு Borstal பள்ளிகள் சட்டமும் இயற்றப்பட்டன. 1919இல் ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய சிறைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளின்படி, குழந்தைகளுக்கான தனி நீதிபரிபாலன முறை ஏற்படுத்தப்பட உறுதியான நடவடிக்கை எடுக்கவும், குழந்தைகளை இதர குற்றவாளியுடன் சிறையில் வைக்கக்கூடாது எனவும் முதன்முதலாக சிறு திருத்தம் கொண்டுவரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படியும், பீஜிங் விதிகளை 1985இல் இந்தியா கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டதாலும், இந்தியா முழுமைக்கும் பொதுவான சிறார் நீதி பரிபாலன சட்டம், 1086 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 253 பயன்படுத்தி, இந்திய அரசாங்கம் இயற்றியது. இச்சட்டத்தின்படி, 16 வருடங்கள் வயதைப் பூர்த்தி செய்யாதவர்கள் குழந்தைகள் என அழைக்கப்பட்டு, குழந்தைகளுக்கான பிரத்யேக சட்டம் உருவானது. சிறார் நீதி பரிபாலன சட்டம் 1986, 16 வருடங்களைப் பூர்த்தி செய்யாத சட்டத்திற்கு முரணான குழந்தைகளின் நீதி பரிபாலனத்திற்காக இயற்றப்பட்டது அதிலுள்ள குறைகளைக் களைந்து குழந்தை என்றால் 18 வருடங்கள் வயதைப் பூர்த்தி செய்யாதவர்கள் என பொருள் வரையறைப்படுத்தி, சட்டத்திற்கு முரணான குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காகவும், பல்வேறு சரத்துக்களை ஏற்படுத்தி, சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000 என்ற சட்டம் இயற்றப்பட்டும், அது 2006 மற்றும் 2011 முக்கிய திருத்தங்களுக்கு உள்ளானது. கொடூரக் குற்றங்களில் நேர்வில் குழந்தைகளின் வயதை குறைத்து, அவர்களை பெரியவர்களுக்கு இணையாக தண்டனைக்கு உள்ளாக்குவவதற்கு, மத்திய அரசாங்கம் புதியதொரு சட்டத்தை இயற்றலாம் என பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனவே சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 (2/2016) என்ற முற்றிலும் புதியதொரு சட்டத்தை மத்திய அரசாங்கம் இயற்றி, அது 15.01.2016 முதல் இந்தியா முழுமைக்கும் (ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் நீங்கலாக) அமுலுக்கு வந்து, இதற்கு முந்தைய சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000 முற்றிலுமாக நீக்கி விட்டது. இப்புதிய சட்டம் சட்டத்திற்கு முரணான குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் குழந்தைகளின் தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விரிவாக கையாளுகிறது.
Book Details
Book Title சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் | Juvenile Justice Act (Juvenile Justice (Care and Protection of Children) Act )
Author வீ.சித்தண்ணன் Bsc, M.L., CC & IS (Vee.Siththannan Bsc, M.L., Cc & Is)
Publisher ஜெய்வின் பதிப்பகம் (Jeywin Publications)
Year 2018
Edition 1
Format Paper Back
Category Law Books | சட்டப் புத்தகங்கள், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha