Menu
Your Cart

BPO : ஓர் அறிமுகம்

BPO : ஓர் அறிமுகம்
-5 %
BPO : ஓர் அறிமுகம்
S.L.V.மூர்த்தி (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே. நினைத்து பார்த்திருப்போமா? எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா நண்பா என்று கேட்டு கையைப் பிடித்து இழுத்து ஊர் சுற்றிக் காட்டுகிறார்கள். அத்தனை கரிசனம். அத்தனை கனிவு. எல்லாம் சரிதான். ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கூடுதலோ? அமெரிக்கா விழித்திருக்கவேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக நாம் நம் உறக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா? அறுசுவை உணவுதான் என்றாலும் அகால நேரங்களில் அளிக்கப்படும்போது அதை உடல் ஏற்றுக்கொள்ளுமா? நிஜத்தில் இது எப்படிப்பட்ட துறை? பளபளப்பையும் மினுமினுப்பையும் தாண்டி இதில் என்ன இருக்கிறது? பெண்கள் அதிக அளவில் இத்துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது ஏன்? பி.பி.ஓ. வரமா சாபமா? பி.பி.ஓ. என்னும் துறையின் ஆன்மாவை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கம்ப்யூட்டர் உலகில் பில் கேட்ஸுக்கு நிகராக பிரமிப்புடன் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர் ஆண்ட்ரூ க்ரோவ். உலகம் முழுதும் உபயோகிக்கப்படும் அத்தனை கம்ப்யூட்டர்களுக்குள்ளும் இருக்கும் Intel சிப் தெரியுமல்லவா? அந்நிறுவனத்தின் முதுகெலும்பு. ஆன்ட்ரூவின் பூர்வீகம் ஹங்கேரி. ஆனால் அவர் வளர்ந்து, வாழ்ந்து, சாதி..
₹67 ₹70
சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள்வரை வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்-மார்ட்டின் திறப்பு விழாவுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். சிறிய மீனுக்குக் குறி வைத்து பெரிய திமிங்கிலத்தையே வளைத்துப் பிடித்தவர் சாம் வால்ட்டன். அவர் வால்மார்ட் ஸ்டோரை ஆரம்பித்த..
₹95 ₹100
எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலமாகக் கனவு கண்டால் எப்படி இருக்கும்? மாதச் சம்பளம். வருடாந்திர சம்பள உயர்வு. சொந்த வீடு. ஒரு கார். இவை சராசரிக் கனவுகள். அட்டகாசமாக ஒரு ப..
₹124 ₹130
ஒரு நாட்டின் வரலாறு தனி மனிதர்களின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாகத் திகழும் அதிசயம் வரலாற்றில் அபூர்வம். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு, குறிப்பாக இளைஞர்-களுக்கு ஜப்பான் ஒரு முன்மாதிரியாக இருந்து வந்திருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? நூற்றாண்டுகால மன்னராட்சியின்கீழ் ஜப்பான் இருந்த ந..
₹238 ₹250