- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199669079
- Page: 84
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தேநீர் பதிப்பகம்
மனிதகுல வரலாற்றில் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக நெருப்பைச் சொல்லுவர். ஆனால், அதற்கடுத்தநிலையில் எதைச் சொல்வது என்ற கேள்வி எழுப்பினால், கண்டிப்பாக எண்களைத்தான் சொல்லமுடியும். இன்றைய நவீன வாழ்க்கை, எண்ணிமங்களுடனான வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பதுவரை; ஒரு தனிநபரின் அடையாளச்சான்று முதல் அலைபேசி எண்வரை; பூமியின் நடுப்புள்ளியிருந்து பிரபஞ்சமாகிய பேரண்டம் வரை எல்லாமும் இன்றைக்கு எண்கள்தான். ஆனால், இந்த எண்களின் முக்கியத்துவத்தை மொழி ரீதியாகப் புரிந்துகொண்டுள்ளோமா என்றால் கேள்விக்குறிதான். தமிழில் ஆயிரம், இலட்சம் போன்ற முழுமைபெற்ற எண்களைத் தவிர, மற்றவை பெரும்பாலும் உகரத்தில்தான் முடியும். இப்படியொரு சிறப்பு வேறு எந்தமொழிக்கும் இருக்க வாய்ப்பில்லை. தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று நூறுக்கும் ஆயிரத்துக்கும் முன்னரே ஏன் இவ்வாறு எண்ணுப்பெயர்கள் அமைகின்றன? பத்து + மூன்று = பதின்மூன்றா? பதிமூன்றா? பதிமூனா? என எந்தத் தெளிவும் இல்லாமலேயே படிக்கின்றனர்; பயன்படுத்துகின்றனர்.
| Book Details | |
| Book Title | குற்றியலுகர எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி (Kurriyalukara Ennuppeyarp Punarchchi) |
| ISBN | 9788199669079 |
| Publisher | தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam) |
| Pages | 84 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |