Menu
Your Cart

மணற்கேணி

மணற்கேணி
-5 % Out Of Stock
மணற்கேணி
₹285
₹300
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மணற்கேணியில், நீண்ட கதைகளாக எழுதப்பட வேண்டியவை, கதையம்சமே அற்ற நினைவலைகள் போன்றவை, கவிதையாக எழுதப்பட வேண்டிய தருணங்கள், சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர் கொள்ளக்கூடிய கணங்கள், கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் பிரத்தியேக அனுபவங்கள் என்று பல்வேறு விதமான சந்தர்ப்பங்களைக் குறுங்கதை வடிவில் எழுதிப் பார்த்திருக்கிறேன். இவற்றை எழுதும்போது நான் அடைந்த கிளர்ச்சி அபரிமிதமானது. மிகக் குறைந்த வார்தைகளில் வாக்கியங்களை உருவாக்க முடிந்ததும்,மிகக் குறைந்த வாக்கியங்களில் மனிதர்களும் இடங்களும் உருவான விதமும் பெரும் போதையை அளித்தன. உரையாடல், விவரணை, விசாரணை என்று புனைகதையின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்ற எவ்வளவு குறைவான மொழிப் பிரயோகம் போதுமானதாய் இருக்கிறது என்பது தொடர்ந்து ஆச்சிரியம் தந்தவாறிருந்தது. -யுவன் சந்திரசேகர்.
Book Details
Book Title மணற்கேணி (Manarkeni)
Author யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
ISBN 9788184939514
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 600
Published On Nov 2012
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார். ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்..
₹309 ₹325
இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை ‘நினைவுதிர் காலம்’. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி’ நாவலின் தொடர்ச்..
₹333 ₹350
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதை சொல்லி யுவன் சந்திரசேகர். அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான ‘பயணக் கதை’ அவருடைய நாவல்களிலேயே உச்சபட்ச வாசிப்பு சுகத்தை உள்ளடக்கியிருக்கிறது. மூன்று நண்பர்க..
₹456 ₹480
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதை சொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி. அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படு..
₹276 ₹290