Menu
Your Cart

மணிமேகலைக்காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை

மணிமேகலைக்காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை
-10 %
மணிமேகலைக்காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை
₹90
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்னும் அதிகமாய் என்னை வசீகரித்தது. நூலின் தலைப்பு. "மணிமேகலைக் காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை", என்று சொல்லியவிடத்து, மனத்தில் அறம் என்பது அற்றுப்போதலே பேரிடர் என்று குறிப்பிடுவது மானுட சமூகம் பற்றிய தொலைநோக்குப் பார்வையை அவர் கொண்டிருக்கும் விதம் என்று சொல்கிறது. பேரிடர் காலத்தில் மக்களிடம் தோன்றும் பசி என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை மணிமேகலை சொல்வது இந்தக்காலத்திற்கு நிரம்பப் பொருந்தும், அந்தப் பேரிடரை மேலாண்மை செய்திடும் அறமே அடிப்படையான மாண்பாக இருக்கமுடியும் என்பதே நூலின் சாராம்சம். அதற்கான இலட்சியச் சான்றுகளையெல்லாம் இரு கைகளால் விரலிடுக்குகள் வழியாக நழுவ விடாமல் அள்ளித் தந்திருக்கிறார். ‘மணிமேகலைக் காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை', கல்லூரிகளில் மாணவர்க்குப் பாடமாகக் கூடிய ஆய்வு நூல். வாசிப்புச்சுவை ததும்பும் ஒரு நூல். நவீனக்கருத்தியல் பார்வையின் ஒளிவீசும் ஒரு நூல். இதை வாசித்து அணிந்துரை எழுதும் வாய்ப்பு மகிழ்வளிக்கிறது. ஆசிரியர் மு.ரமேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். -கவிஞர் குட்டிரேவதி, சரசரவென கொட்டும் அருவி போல. ஒவ்வொரு தலைப்பையும் விளக்கும் போது, அது நீட்டிக்கும் இன்னொரு கிளையை உட்தலைப்பாக எடுத்து விளக்குவதில் பேரசிரியரின் பரந்த அறிவும், படிப்பவர்களுக்கு முடிந்த அளவுக்கு முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ளச்செய்ய வேண்டும் என்கிற கடமையுணர்வும் தெரிகிறது. அப்படித்தான் கடற்கோள்கள், 'ஆ' என்பதன் விளக்கம், ஆகிகலை புவி அமைப்பு முறை, கண்டப்பெயர்வு எனப் பல அரிய நிறைய புதிய செய்திகளும் விளக்கங்களும் ஆதாரங்களோடு இப்புத்தகத்தில் புதையலாக கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. -ஊடகவியலாளர் இல, வேந்தன்.
Book Details
Book Title மணிமேகலைக்காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை (manimekalaikaappiyaththil-peridar-melaanmai)
Author முனைவர் மு.ரமேசு
Publisher தமிழறம் பதிப்பகம் (Tamizharam Publications)
Pages 78
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமய மெய்யியல்கள் பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் ஆகிய இரண்டு அடிப்படைகளை உடையன. இவற்றுள் ஒன்று உலகு பற்றியது; மற்றொன்று இவ்வுலகை கடந்த அதாவது உலகிற்கு அப்பாற்பட்ட ஒன்று பற்றியதாகும். இவ்விரு மரபுக்களுக்குள்ளும் பலவிதமான குழுக்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் செயல்பட்டன. ஒவ்வொரு குழுவும் தான்கொண்ட மெ..
₹180 ₹200