Menu
Your Cart

மரபியல்

மரபியல்
மரபியல்
ம.செந்தமிழன் (ஆசிரியர்)
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தொல்காப்பியர் வழங்கிய தொல்காப்பியத்தின் மரபியல் செய்யுள்கட்கு ஆசான் ம.செந்தமிழன் உணர்ந்து இயற்றிய விரிவுரை - மரபியல் விரிநூல். தமிழின் தொன்மையான நூல்களில் இன்றியமையாததும், 7000 ஆண்டுகளுக்கு முந்தையதுமானது தொல்காப்பியம். >>தமிழ் சமூகத்தின் நடைமுறைகள் மற்றும் முன்னோர் உணர்ந்து கூறிய கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துக் காக்கும் பெட்டகம் தொல்காப்பியம். >>தொல்காப்பியம் கூறும் இலக்கணங்களும் கருத்துகளும் இன்றும் சமூக நடைமுறைகளாகவும் மொழி வழக்கமாகவும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழிகாட்டும் இறை ஒளி. >>இது தமிழ்ச் சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக, அறமார்ந்த சமூகமாக காலத்திற்கும் நிலைபெறச்செய்யும் மெய்யியல் மறை நூல். இப்பெருமை வாய்ந்த தொல்காப்பியம், பிற்காலத்தில் தமிழ் மொழிக்கான இலக்கண நூலாகவும் சமயம் சார்ந்த நூலாகவும் மட்டுமே பிழையாக அறியப்பட்டு வந்தது. >>பிற்காலத்தில் தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகள், இந்நூலில் உள்ள மெய்மைகளைப் புறந்தள்ளி, கருத்துத் திரிபுகளை ஏற்றின. இதனால், தொல்காப்பியம் தமிழர்களுக்கு எட்டாக் கனியாகியது. >>எப்போதெல்லாம் மெய்மைக்கு நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்ச் சமூகமும், மெய்யியலாளர்களும் எழுச்சி கொண்டு மீட்புப்பணிகளையும் காப்புப் பணிகளையும் செய்திருக்கிறார்கள். >>“வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து” எனும் தொல்காப்பியப் பாயிரத்தின் வரிகளும், அவற்றுக்கு ஆசானின் விளக்கமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நிலம் முழுதும் பரவிவாழ்ந்த தமிழ்ச் சமுகத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் இன்றைய சுருங்கிய நிலப்பரப்பு, இழந்த மரபு, மறுக்கப்படும் மாண்பு போன்ற தற்கால நெருக்கடிகள், வாசிப்போரின் மனக்கண்ணில் விரிவதைத் தவிர்க்க இயலாது.
Book Details
Book Title மரபியல் (Marabiyal)
Author ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan)
Publisher செம்மை வெளியீட்டகம் (Semmai Publication)
Pages 160
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்இந்நூலின் ஆசிரியர் பழங்குடிகளின் இருப்பிடத்தில் வசித்த அனுபவத்தையும் இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்விலிருந்து கற்றுக்கொண்டது குறித்தும் விவரிக்கும் நூல்...
₹60
முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லைஅறிவியல் சார்ந்து நாம் பார்க்காத விஷயங்களை பார்க்காத கோணத்தில் முன்வைக்கும் நூல்...
₹80
இட பாகம்..
₹50
இறைமை”இல்லை என்போர் என்னைத் தொலைக்கின்றனர்உண்டு என்போர் என்னைக் கடந்து செல்கின்றனர்தெரியாது என ஒப்புக்கொள்வோர் என்னைக் காண்கின்றனர்”..
₹50