- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: புழுதி பதிப்பகம்
இந்த நூலுக்கு “முகத்துவாரம்” எனப் பெயர் சூட்டியதற்கு ஒரு பொருள் உண்டு. ஆறும் கடலும் சங்கமிக்கும் இடத்தை முகத்துவாரம் என்று அழைப்பார்கள். அதுபோல, மொழிபெயர்ப்பு படைப்புகளும் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், வாழ்வியல் அனுபவங்கள், பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவற்றை கண்டங்கள் கடந்து இணைக்கும் சங்கமப் புள்ளியாக அமைகின்றன. மனித மனங்களை மொழி எல்லைகளை மீறி இணைக்கும் வலிமை மொழிபெயர்ப்புக்கே உரியது.
சூழலியல் பார்வையில், முகத்துவாரப் பகுதிகள் தனித்துவமான உயிர்ச் சூழலை உருவாக்கும் இடங்களாகக் கருதப்படுகின்றன. பல்வேறு உயிரினங்கள் தங்களுக்கு ஏற்ற சூழலை இங்கே கண்டடைகின்றன. அதேபோல, இந்த “முகத்துவாரம்” நூலும் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் ஏற்ற ஒரு படைப்பியல் சூழலை உருவாக்கும் புத்தகமாக அமையும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்குள்ளது.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நேர்காணலும், படைப்பாளிகளின் வாழ்வையும், மொழிபெயர்ப்பு உருவான சூழலையும், இரண்டு நிலங்கள் சந்திக்கும் அந்த வெளிப்பரப்பையும் நம்முன் திறந்து வைக்கின்றன. அவை வாசிக்க மட்டுமல்ல, எழுதவும், தேடி தேடி வாசிக்கவும் நம்மைத் தூண்டுகின்றன.
| Book Details | |
| Book Title | முகத்துவாரம் (Mukaththuvaaram) |
| Compiler | பத்மா அமர்நாத் |
| Publisher | புழுதி பதிப்பகம் (Puzhuthi pathippakam) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Interview | நேர்காணல், 2026 New Releases |