Menu
Your Cart

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்
-5 %
ஃபேஸ்புக்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இணையத்தின் #1 சமூக ஊடகம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கின் விறுவிறுப்பான வெற்றிக்கதை! இன்றைக்கு நம்முடைய நிஜ நண்பர்களைவிட ஃபேஸ்புக் நண்பர்கள் மீதுதான் அதிக அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறோம். எதைச் சாப்பிட்டாலும், எதைச் சாதித்தாலும் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிப்பிக்கிறோம். ஃபேஸ்புக் லைக்குகள் ஒவ்வொன்றும் தலைக்குள் கைதட்டல்களாகக் கேட்கின்றன. எதையேனும் வாங்குவதென்றால் முதலில் ஃபேஸ்புக்கில்தான் கருத்து கேட்கிறோம், ஃபேஸ்புக் மெசஞ்சர் செய்திகள், குழுக்கள், வீடியோக்கள், இன்னும் அவர்கள் அறிமுகப்படுத்துகிற புதுப்புது வசதிகள் ஒவ்வொன்றும் உடனடியாக நம்முடைய புதிய தகவல் தொடர்புக் கருவிகளாகிவிடுகின்றன... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் சமூக உறவுகளை இப்படிப் புரட்டிப்போட்டதில்லை. ஃபேஸ்புக் என்ற நிறுவனம் எப்படித் தொடங்கியது? இப்படியொரு சிந்தனை யாருக்கு முதலில் வந்தது, எப்படி வந்தது? அதை இத்தனை பெரிய நிறுவனமாக ஆக்குவதில் அவர்களுக்கு உதவியவர்கள் யார் யார்? அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறினார்கள்? ஃபேஸ்புக்கின் போட்டியாளர்கள் யார் யார்? மற்றவர்களுக்குச் சாத்தியமாகாத ஒரு வெற்றியை ஃபேஸ்புக் பெற்றிருப்பது எப்படி? வருங்காலத்தில் ஃபேஸ்புக் எப்படி வளரும்? என்னவெல்லாம் செய்யும்? ... இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விறுவிறுப்பான மொழியில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம். வாங்கிப் படியுங்கள், ஃபேஸ்புக்கின் வெற்றிக்கதையைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வரிசையில் என். சொக்கனின் மற்ற நூல்கள்: கூகுள்: வெற்றிக்கதை, ட்விட்டர்: வெற்றிக்கதை
Book Details
Book Title ஃபேஸ்புக் (Facebook)
Author என்.சொக்கன் (N.Chokkan)
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185