Menu
Your Cart

முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்

முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
-5 % Out Of Stock
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விவரணை லிங்க வணக்கம் சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டுத் திகழ்வது சிவலிங்கமாகும். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவன்; சிவன் என்ற சொல்லுக்கு நன்மை, கடவுளின் அருவுரு நிலை, முக்தி, மங்கலம், செம்மை, உயர்வு,களிப்பு எனப் பல பொருள்கள் உண்டு, எனவே, செம்மையும் நன்மையும், மங்கலமும் உடையான் என்பதைச் சிவன் என்ற சொல்லால் குறித்தனர் என்பது பெறப்படும். எண் குணத்தானாய சிவன் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்சோதி வடிவானவன், பூவின் மணம் போலும், பாலின் நெய்போலும் திகழ்பவன் என்பதை அப்பர் பெருமான் பாடியிருக்கிறார். நான்முகனும் திருமாலும் அடிமுடி காணமுடியாதவாறு அனைத்து உலகங்களையும் அளந்து நின்ற அரும்பெரும் சோதிதான் லிங்கம். சோதிமயமான இந்த லிங்கம்தான் எல்லாக் கோயில்களிலும் மூலவராக விளங்கி அருள்புரிந்து எல்லாக் கோயில்களிலும் மூலவராக விளங்கி அருள்புரிந்துவருகிறது. சோதி வடிவினனாகச் சிவன் தோன்றியதை அடுத்தே இந்தியப் பெருநாட்டில் பன்னி்ரண்டு தலங்களில் பன்னி்ரண்டு தலங்களில் சோதிலிங்கங்கள் அமைந்து வழிபாட்டில உள்ளன என்பது சமய வரலாறு. திருமால், நான்முகன் இருவருக்கும் காட்சி கொடுத்தது போன்று, பரஞ்சோதியாய் வெளிப்பட்டு பக்தர்களுக்குத் திருக்காட்சி கொடுத்தருளிய தலங்களே சோதிலிங்கத் தலங்கள் என்று பெயர் பெற்றன. சிவபெருமான் சோதியாக வெளிப்பட்டுக் காட்சியளித்த இப்பன்னிரண்டு சோதிலிங்கத் தலங்களில் திரியம்பகம், குசுமேசுவரம், நாகேசுவரம், வைத்தியநாதம், பீமசங்கரம், ஆகிய ஐந்தும் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளன. மகாகாளமும், ஓங்காரேசுவரமும் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன. கேதாரம் உத்தரகாண்ட் மாநிலத்திலும், விசுவேசம் உத்திரப் பிரதேசத்திலும் உள்ளன. சோமநாதம் குசராத் மாநிலத்தில் உள்ளத. ஸ்ரீசைலம் ஆந்திரப் பிரதேசத்திலும் இரேமேசுவரம் தமிழ்நாட்டிலும் உள்ள, இத்தலங்களுள் இரேமேசுவரம் தவிர்த்த மற்ற பதினொன்று தலங்களும் ஆவுடை இன்றி உள்ளன. மக்கள் அனைவரும் அறிந்த காசி என்று வழங்கும் வாரணாசி விசுவலிங்கமும் இதில் ஒன்று ஆகும். சிவனருளால் சோதிலிங்கங்களைத் தரிசிப்பதே பெரும்பேறாகும். 
Book Details
Book Title முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் (Mukhthi Tharum Panniru Jothirlinga Thalangal)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 280

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author