 
                    
                                      -5 %
                                  
                          நீல பத்மநாபன்168 சிறுகதைகள்
                    
          
			
			 
			 
				 
								நீல.பத்மநாபன்  (ஆசிரியர்)				 
						
			
            
                         Categories: 
			 
				 
								Short Stories | சிறுகதைகள் 							            
			
          
                      
          
          
                    ₹808
                 ₹850
                            - Edition: 1
- Year: 2013
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                கதை, கவிதை, நாவல்களில் சாதனைப் படைத்த நீல பத்மநாபனின் கடந்த, ஏறத்தாழ அறுபதாண்டு கால எழுத்தாக்கத்தில் அறுவடையான 168 கதைகளின் படையல் - முழுத் தொகுதி இது. கதைக் கருவின் தேர்வில் சமூகப் பிரக்ஞையும், கையாளும் முறையில் கலை நேர்த்தியும், நேர்மையும் கொண்டவை இக்கதைகள். குங்குமமிருந்தச் சிமிழ் போல், கஸ்தூரி இருந்த பெட்டகம் போல், வாசித்த பின்னரும் நம் உணர்வுகளை விட்டு அகலாதவை. நம் சிந்தையில் தங்கி நின்று இலக்கிய இன்பம் வழி, வாழ்க்கையைப் பற்றிய நமது பார்வையை விஸ்தரிப்பவை... காலத்தைக் கடந்து வந்திருக்கும் இக்கதைகளில் மரபின் மாண்பு, ஆன்மிகத்தின் அடிச்சுவடுகள், புதுமையின் பண்பு. தொன்மங்களின் அழகியல், அங்கதச் சுவைகள், சூசகங்கள் போன்றவை உளவியல் பாங்குடன் ஆரவாரமின்றி, அடக்கமாக அரங்கேறி யிருக்கின்றன. வாசிப்புக்கும், மறுவாசிப்புக்கும், பாதுகாப்புக்கும் உகந்தவை.
20 நாவல்கள், 12 சிறுகதைத் தொகுதிகள், 5 கவிதைத் தொகுதிகள். 11 கட்டுரைத் தொகுதிகள் மற்றும் 1 நாடகத் தொகுதி இவரின் படைப்பாக்கங்கள்... வெளியீடுகள்... அனைத்திந்திய மொழிகளுக்கும், ஆங்கிலம், ஜெர்மன், ரஷியன் போன்ற உலக மொழிகளுக்கும் சென்று, தமிழுக்குப் பெருமை சேர்த்த இவர் படைப்புகள் பல. சாசித்திய அகாதமி பரிசு, அண்ணாமலைச் செட்டியார் பரிசு, இலக்கியச் சிந்தனை பரிசு உள்ளிட்ட விருதுகள் பல இவரைத் தேடி வந்திருக்கின்றன.
சென்ற ஆண்டு (2013) பவள விழா கண்ட நீல பத்மநாபனுக்கு வானதியின் பவள விழா படையல், இந்த முழு சிறுகதைத் தொகுதி.
                              
            | Book Details | |
| Book Title | நீல பத்மநாபன்168 சிறுகதைகள் (நீல பத்மநாபன்168 சிறுகதைகள்) | 
| Author | நீல.பத்மநாபன் (Neela.Padmanaban) | 
| Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) | 
| Year | 2013 | 
| Edition | 1 | 
| Format | Hard Bound | 
| Category | Short Stories | சிறுகதைகள் | 
