Menu
Your Cart

அருவம் உருவம்: நகுலன் 100

அருவம் உருவம்: நகுலன் 100
-5 %
அருவம் உருவம்: நகுலன் 100
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புதுமைப்பித்தன், பிரமிள், மா. அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணி நகுலன். மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப் பார்த்த எழுத்துக் கலைஞன் அவர். அவரது நூற்றாண்டை முன்னிட்டு அவரது படைப்புகளை மதிப்பிடும் தொகை நூல் ‘அருவம் உருவம்’. இதுவரை தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலச் சிறுகதை மற்றும் கவிதைகளின் மொழியாக்கம், நகுலனின் சித்திரங்கள், புகைப்படங்கள், கடிதங்கள், நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் கட்டுரைகள் என நகுலனைப் புரிந்துகொள்வதற்கான முழுமையான ஆவணம் இது. புதுமைப்பித்தன், பிரமிள், மா.அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணியாக நகுலன் இருக்கிறார். இருப்பு மீதான சார்பும், இருப்பு மீதான பூதாகரமான பிடிமானமும், இருப்பு தொடர்பிலான பிரமாண்டமான அகந்தையும் பெருகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இன்மையைத் தனித்தவொரு வசீகர இருப்பாகச் சுட்டிக்காட்டிய நகுலன் மீதும் அவரது படைப்புகள் மீதும் கவனம் செலுத்துவது ஒரு விழுமியத்தைத் தக்கவைப்பதும்கூட.
Book Details
Book Title அருவம் உருவம்: நகுலன் 100 (aruvam-uruvam-nagulan-100)
Author ஷங்கர் ராமசுப்ரமணியன் (Sankar Ramasubramaniyan)
Publisher நூல் வனம் (Nool Vanam)
Published On Aug 2022
Year 2022
Edition 1
Format Hard Bound
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த பத்தாண்டுகளில் கவனம் பெற்று வந்திருக்கும் கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் தன் சமகாலத்துக் கவிதைகள், கவிதைச் சூழ்நிலை, படித்த புத்தகங்கள், கண்டு நட்பு கொண்ட இலக்கிய உலக ஆளுமைகள், இன்றைய எழுத்துலகச் சூழல் முதலான பல விஷயங்கள் குறித்து தன் எண்ணங்கள், கருத்துகளை இக்கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார்...
₹105 ₹110
ஆயிரம் சந்தோஷ இலைகள் மானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்..
₹238 ₹250
தொலைவதை ஏற்பதற்கு, தொலைவதின் ரகசியம் முன்னால் மண்டியிட்டு அதை ஏற்றுக் கடந்து செல்வதற்கு, நான் கற்றுக்கொண்டு வரும் பாடங்களின் தடயங்கள்தான் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள். தொலைந்த நிகழ்வுகள், தொலைந்த கணங்களை என் உடல் மேல் ஏவிக்குதறும் வேளையில் தற்கணங்களை, இவ்வேளையின் காட்சிகளை, நிலப்பரப்புகளை, விலங்..
₹171 ₹180
எல்லா உறவுகளையும் விட கவிதையுடனான உறவு மிகுந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டது, என்னிடம் நம்பிக்கையை வைத்திருக்கும் வளர்ப்பு பிராணி ப்ரவுனியைப் போல. பரிபூரண நம்பிக்கை, என்பது தொடர்பில் நாம் ஒரு கருத்தைத் தான் வைத்திருக்கின்றோம். ப்ரவுனிக்கு நம்பிக்கை என்பது கருத்து அல்ல. கருத்தாக இல்லாத பரிபூரண நம..
₹238 ₹250