Menu
Your Cart

நிலமும் பொழுதும்

நிலமும் பொழுதும்
-5 %
நிலமும் பொழுதும்
நிர்மல் (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'இந்தப் பூமி எப்போது உருவானது? எப்படி உருவானது?' என்பது பற்றியும், 'பூமியின் இயற்கை வரலாறு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?' என்பது பற்றியும் மிகத் தெளிவாக, அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கிச் சொல்கிற 'நிலமும் பொழுதும்' என்கிற இந்தப் புத்தகம் அச்சுறுத்தும் பண்டிதர் நடையில் இல்லாமலும், வாசகனை முட்டாளாக நினைத்து அடிமட்ட நடையில் இல்லாமலும், தன் அறிவியல் பயணத்தை, தனது தேடலை, தன் சக நண்பனுடன் ஒரு மழைக்கால மாலையில் தேநீர் அருந்தியபடி இயல்பாக உரையாடும் புதுப் பாணியில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பேரண்டத்தின் ஒரே உயிர்க்கோளான நம் பூமியின் இயற்கை வரலாற்றை அனைவருக்கும் எளிதாகப் புரிய வைக்கிற இந்தப் புத்தகம், அறிவியல் கொண்டு ஆன்மீக அனுபவத்தையும் தருகிறது. மேலும், இயற்கையைத் தோழனாகவும், வரலாற்றை வழிகாட்டியாகவும் வாசகர்களின் உணர்வில் கலக்க வைக்கிறது. 'நிலம்', 'வளம்' மற்றும் 'சூழலியல்' சார்ந்த அரசியலுக்கான அடிப்படைப் புரிதலை தெளிவாக எடுத்துச் சொல்கிறது. அறிவியல் பயணமாக ஆரம்பித்தாலும், அந்தப் பயணத்தின் போது கண்களில் படும் இலக்கியம், வரலாற்று நிகழ்வுகள், உலக அரசியல், ஆத்திகம் மற்றும் நாத்திகம் ஆகியவற்றின் போக்குகள் பற்றியும் இந்தப் புத்தகம் உரைக்கும் கருத்துக்கள் யாவும் வாசகர்களுக்கு நிஜமான, சுகமானதோர் பயண அனுபவத்தைத் தரும். மேலும், நமது அரசியலையும், கலை நுண்ணுணர்வையும், ஆன்மீக நம்பிக்கைகளையும் இன்னும் செம்மைப்படுத்த நம்மைத் தூண்டுகிற புதினமாகவும் இந்தப் புத்தகம் இருப்பது கூடுதல் சிறப்பு.
Book Details
Book Title நிலமும் பொழுதும் (NILAMUM POZHUDHUM)
Author நிர்மல்
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Ecology | சூழலியல், Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக இருப்பதற்கான எல்லாவிதமான காரணங்கள் இருந்தும் கூட, சில நாடுகள் மட்டும் உலக வரைபடத்திலிருந்து காணாமல் ப..
₹133 ₹140
வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே பேசுகிறது இந்நூல். "ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான். அடுத்த மனிதன் காட்ட..
₹133 ₹140
நூலகங்களுக்குச் சென்று நூல்களைப் புரட்டுகையில், கடற்கரை சென்று கடலில் கால்களை நனைக்கையில், அலுவலகங்கள் கடைகள் சென்று அவரவர் பணிகளை முடிக்கையில், என்றேனும் இந்தச் செயல்பாடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சாத்தியமாகுமா என சிந்தித்து இருப்போமா? படிகளில் பாய்ந்தேறும் நாம் முதுமையில் மாற்றுத்திறனாளிகளாகக் கூட..
₹228 ₹240