Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

அருவம் உருவம்: நகுலன் 100

அருவம் உருவம்: நகுலன் 100
-5 % Out Of Stock
அருவம் உருவம்: நகுலன் 100
₹523
₹550
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
புதுமைப்பித்தன், பிரமிள், மா. அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணி நகுலன். மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப் பார்த்த எழுத்துக் கலைஞன் அவர். அவரது நூற்றாண்டை முன்னிட்டு அவரது படைப்புகளை மதிப்பிடும் தொகை நூல் ‘அருவம் உருவம்’. இதுவரை தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலச் சிறுகதை மற்றும் கவிதைகளின் மொழியாக்கம், நகுலனின் சித்திரங்கள், புகைப்படங்கள், கடிதங்கள், நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் கட்டுரைகள் என நகுலனைப் புரிந்துகொள்வதற்கான முழுமையான ஆவணம் இது. புதுமைப்பித்தன், பிரமிள், மா.அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணியாக நகுலன் இருக்கிறார். இருப்பு மீதான சார்பும், இருப்பு மீதான பூதாகரமான பிடிமானமும், இருப்பு தொடர்பிலான பிரமாண்டமான அகந்தையும் பெருகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இன்மையைத் தனித்தவொரு வசீகர இருப்பாகச் சுட்டிக்காட்டிய நகுலன் மீதும் அவரது படைப்புகள் மீதும் கவனம் செலுத்துவது ஒரு விழுமியத்தைத் தக்கவைப்பதும்கூட.
Book Details
Book Title அருவம் உருவம்: நகுலன் 100 (aruvam-uruvam-nagulan-100)
Author ஷங்கர் ராமசுப்ரமணியன் (Sankar Ramasubramaniyan)
Publisher நூல் வனம் (Nool Vanam)
Published On Aug 2022
Year 2022
Edition 1
Format Hard Bound
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha