Menu
Your Cart

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு
-5 %
பல்லவர் வரலாறு
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை, குறிப்பாக காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட ஒரு சக்திவாய்ந்த வம்சம் பல்லவ வம்சம்: இவர்கள் கலை, இலக்கியம், கட்டிடக்கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கினர். குறிப்பாக மாமல்லபுரக் கோயில்கள் மற்றும் பல்லவர் எழுத்து வடிவங்கள் மூலம் தமிழக கட்டிடக் கலையின் அடித்தளத்தை அமைத்தவர்கள். மாமல்லபுரத்தின் ரதங்கள். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் போன்ற குடைவரைக் கோயில்கள், செதுக்கப்பட்ட சிற்பங்கள் இன்றளவும் பல்லவர்களின் ஆட்சியை பறை சாற்றுகின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளித்தனர்; பல்லவர் எழுத்து வடிவமானது தமிழ் மற்றும் கிரந்த எழுத்துகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில், சோழ மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டது இப் பேரரசு. பல்லவரைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் பலவும் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் நன்கு ஆராய்ந்து தமிழில் இதுகாறும் செம்மையுற எழுதப்படவில்லை. காலஞ்சென்ற பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் எழுதிய இந்த நூல் தலைசிறந்த நூலாகப் போற்றப்படுகிறது. பல்லவர் வரலாறு என்னும் இந் நூல் தமிழகத்திற்கு புதியமுறையில் தமிழ்நண்பன் பதிப்பகம் மூலம் தரப்படும் தமிழ் விருந்தாகும்
Book Details
Book Title பல்லவர் வரலாறு (Pallavar varalaru)
Author மா.இராசமாணிக்கனார் (Maa.Iraasamaanikkanaar)
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 372
Year 2025
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha