- Edition: 1
- Year: 2026
- Page: 772
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
எட்டாம் நூற்றாண்டில் சாளுக்கிய இளவரசன் இரண்டாம் விக்ரமாதித்யனின் படையெடுப்பில் நிலைகுலைந்து வீழ்கிறது பல்லவப் பேரரசு!
காஞ்சி மாநகரையும் பல்லவப் பேரரசையும் மீட்கக் காஞ்சியின் சான்றோர்கள் வாரிசு தேடிப் புறப்படுகிறார்கள். பல தலைமுறைகளுக்கு முன்பு, பல்லவ இளவரசன் பீமவர்மன் காஞ்சியில் இருந்து காம்போஜம் சென்று அங்கு நிறுவிய பல்லவக் கிளை வம்சத்தை நோக்கித்தான் அந்தப் பயணம் அமைந்தது.
அங்கு 13 வயது இளவரசனாக வளர்ந்து கொண்டிருந்த பரமேஸ்வர பல்லவ மல்லன் தன் தொப்புள்கொடி உறவான காஞ்சியின் அழைப்பை ஏற்று, தாயகம் திரும்பி, பல்லவப் பேரரசை மீட்டு, மேலும் இருநூறு ஆண்டுகள் காஞ்சியில் பல்லவர்களின் செங்கோலை நிலைக்கச் செய்தான். அவனே 'காம்போஜ மல்லன்' இரண்டாம் நந்திவர்மன். அவனைப் பற்றிய காவியமே இந்தச் சரித்திர நாவல்!
வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை நயத்துடன் ஆசிரியர் பரிமுகன் இப்புதினத்தை விறுவிறுப்பாக புனைந்துள்ளார்.
| Book Details | |
| Book Title | காம்போஜ மல்லன் (Kaampoaja Mallan) |
| Author | பரிமுகன் (Parimukan) |
| Publisher | Swasam Bookart / சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
| Pages | 772 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |