Menu
Your Cart

சோஃபியின் உலகம்

சோஃபியின் உலகம்
Out Of Stock
சோஃபியின் உலகம்
₹500
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?' இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின் உலகம் வேறாகிறது. காலங்காலமாக சிந்திக்கும் மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சோஃபியும் விடைதேடத் தொடங்குகிறாள். அதன் வழியாக மனிதகுலத்தின் வரலாற்றை, தத்துவப் போக்குகளைப் புரிந்துகொள்கிறாள். இந்தப் பிரபஞ்சம், இந்த பூமி, இந்த வாழ்க்கை - இவை எல்லாம் எப்படி வந்தன என்ற கேள்வி ஒலிம்பிக் போட்டியில் யார் அதிகம் தங்கப் பதக்கங்களை வென்றார்கள் என்பதைவிட முக்கியமானது என்பதை இளம் தலைமுறைக்கு வலியுறுத்த எழுதப்பட்ட நூல் ‘சோஃபியின் உலகம்’. தத்துவ நூலுக்குரிய இறுக்கமில்லாமல் ஒரு நாவலின் சுவாரசியத்தோடு எழுதப்பட்ட இந்நூலில் மனிதனின் ஆதிகால நம்பிக்கைகள் முதல் சாக்ரடீஸ், பிளாட்டோ வழியாக சார்த்தர் உட்பட்ட சான்றோர்களின் சிந்தனைகள்வரை அறிமுகமா கின்றன. இதுவரை ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று கோடிப் பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து உலகில் அதிக எண்ணிக்கையில் வாசகர்களைப் பெறும் நூலாகக் கருதப்படும் ‘சோஃபியின் உலகத்தை’ தெளிவான மொழியாக்கத்தில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது ‘காலச்சுவடு பதிப்பகம்’.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

உருமாற்றம்..
₹90
இரண்டு வார்த்தைக்ளும் மூன்றுதுறவிகளும்(மொழிபெயர்ப்புச்சிறுகதைகள்)-தமிழில்-ஆர்.சிவக்குமார்:சிவக்குமாரின் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்கும் மதிப்பு இவற்றை உணர மு..
₹275
பூமிக்கு மேலே முடிந்துபோன வாழ்க்கையின் சச்சரவுகள் கூடுதல் தீவிரத்துடன் பூமிக்குக் கீழேயும் தொடர்கின்றன. ஓரிருவர் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் மரித்தவர்கள்தாம். ஏமாற்றமும் அவமானமும் பொறாமையும் பூசலும் நிரம்பிய கொந்தளிப்பான ஒரு பெண்ணை மையமாக வைத்து நகர்கிறது நாவல். கவித்துவமும் துள்ளலும் ஒரு..
₹390
இலக்கியக் கோட்பாடு சர்ச்சைக்குரிய ஒரு விவாதப் பொருள். இது கடந்த இருபது ஆண்டுகளில் கலாசாரம், சமூகம் பற்றிய ஆய்வை மாற்றத்துக்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. பேரிலக்கியப் போற்றுதலை ஊக்குவிப்பதைவிடக் கலாசார விளைபொருள்களான அரசியல், உளவியல் தொனிப் பொருள்கள் குறித்த சந்தேகத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம..
₹120
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.