- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
-பதிப்புப் பரிமாணங்கள்
ஏட்டுச் சுவடிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள், காகிதச் சுவடிகள் எனப் பிரதிகளைப் பதிப்பித்தல் மரபிலிருந்து நவீனமடைந்து பதிப்பியல் நெறிமுறைகள், மூலபாட ஆய்வு, பாட வேறுபாடு, செம்பதிப்பாக்கம், பதிப்பியல் திறனாய்வு, சந்தைப்படுத்தல், காப்புரிமை என்று இன்றைய பதிப்பியல் விஞ்ஞானம் விரிவடைந்துள்ளது. இவ்விரிவாக்கம் சார்ந்த சிந்தனைகளும் ஆய்வும் பற்றிய அறிவியல்பூர்வமான கட்டுரைகள் பதிப்பாளுமைகளால் எழுதப்பட்டு வந்துள்ளன.
ஏறத்தாழ இருபதாண்டுக் காலப்பகுதியில் பதிப்பியலின் இப்பரிமாணங்கள் பற்றிக் ‘காலச்சுவடு’ இதழில் வெளிவந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பதிப்பியல் வளர்ச்சி வரலாறு குறித்துப் பரவலாக அறியும் வாய்ப்பு இன்றைய பதிப்பாளர்க்கும் பொதுவாசகனுக்கும் கிட்ட வேண்டும் என்பது இத்தொகுப்பின் முதன்மை நோக்கம். பதிப்பியல் முறையியலின் வளர்ச்சிக்கான வெளியில் மாற்றங்களுக்கான வாய்ப்புக்கு இத்தொகுப்பில் இடம்பெறும் கட்டுரைகள் துணை நிற்கும். குறிப்பாக, பதிப்பித்தல் சார்ந்த நெறிமுறைகளின் அடிப்படையில் செம்பதிப்பாக்கப் பதிப்பியல் முறையியலைத் தரப்படுத்திப் பதிப்பாசிரியர்க்கு வழங்க இத்தொகுப்பு மூலவள நூலாக உதவும்.
| Book Details | |
| Book Title | பதிப்புப் பரிமாணங்கள் (Pathippup Parimaanangkal) |
| Compiler | சு.இராசாராம் (S.Rajaram) |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |