- Edition: 1
- Year: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஆதி சிவன் பெற்றெடுத்த தமிழை வீதி மனிதனும் விரும்பச் செய்த மேனி கருத்த மேடைத் தமிழ்ப் பேராசிரியர் சாலமன் பாப்பையா, படிப்பறிவு அதிகமில்லாத பஞ்சாலைத் தொழிலாளர்கள் பாக்கியத்தம்மாள். சுந்தரம் தம்பதியினரின் கடைசிப் பிள்ளை இந்தத் தமிழ்த் தாயின் தலைமகன். இளமையில் வறுமைதான் அவரது வீட்டின் வரவேற்பறை, ஆசிரியரின் அனுசரணையால் தட்டுத் தடுமாறிப் பள்ளிப்படிப்பைக் கடந்தார்.
காலணி வாங்கக் கூடக் காசில்லாத இளைஞனுக்கு ஆருயிர் நண்பர்கள் அருணாச்சலம், தியாகராஜன் மற்றும் ராமமூர்த்தியின் ஆதரவால் எட்டாக்கனியான பட்டப்படிப்பில் வெற்றி கிடைத்தது.
பாட்டும் நடிப்பும் ஓவியமும் மேடைப்பேச்சும் பள்ளி நாட்களிலிருந்தே இவருக்குப் பரிச்சயமானவை. பேச்சுலகப் பிரம்மாக்கள் அமரர் ஜீவா. வாகீச கலாநிதி கி.வா.ஜ.. சிலம்புச் செல்வர் ம.பொ.சி., டாக்டர் கலைஞர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரிடம் மேடைக்கலையைப் பயின்று மெல்ல மெல்லத் தனக்கென ஒரு தனி இடம் பெற்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.
கம்பனடிப்பொடி அமரர் சா.கணேசன் அவர்கள் மீட்டுருவாக்கம் செய்த பட்டிமன்றத்தை தவத்திரு குன்றக்குடி அடிகளார் வீதிகளுக்கு எடுத்துச் சென்று வெகுஜனங்களுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொலைக்காட்சி வாயிலாக உலகத் தமிழர், தம் இல்லங்களில் குடும்பம் குடும்பமாய் அமர்ந்து ரசிக்க வைத்தவர் கலைமாமணி பாப்பையா அவர்கள்.
புதிய பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து, தரம் பார்த்து. தன்னோடு குழுவாய்ப் பயணிக்க வைத்து, பல்லாண்டுகளாய்ப் பேணி வழிநடத்திய பட்டிமன்றப் பிதாமகன் இவர்.
பண்டிகை என்றாலே பட்டாடை, பட்டாசு, பலகாரம் என்பதோடு பட்டிமன்றத்தையும் தமிழரின் பண்பாட்டு அடையாளமாக மாற்றியவர் இவரே. "தினம் ஒரு திருக்குறள்" எனும் சன்டிவி நிகழ்ச்சி வாயிலாகத் திருக்குறள் தாத்தாவாக உலகை வலம் வந்தவர்.
| Book Details | |
| Book Title | பட்டிமன்றம் பாதைகளும் பயணங்களும் (Pattimanram Paathaikalum Payanangkalum) |
| Author | சாலமன் பாப்பையா (Saalaman Paappaiyaa) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |