
- Edition: 1
- Year: 2016
- Page: 216
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிந்தன் புக்ஸ்
இவர்தான் லெனின்
லெனின் எங்கள் தொழிற்சாலைக்கு வந்தார். “நத்தோரவா, கோட்டுக்களை வாங்கி மாட்டு!” என்று என்னிடம் சொன்னார் ஒருவர்.
கிளப் ஹாலில் வெக்கையாக இருந்தது. லெனின் பேசத் தொடங்கினார். மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் போட்டார். நான் அதை எடுத்து மேலுடை மாட்டும் அறைக்கு கொண்டுபோனேன். பார்க்கிறேனோ... இடது பக்கம் நடுப் பொத்தானைக் காணவில்லை. என் கோட்டிலிருந்து ஒரு பொத்தானைப் பிய்த்து எடுத்து அதை லெனினுடைய மேல்கோட்டில் உறுதியான நூலால் தைத்தேன், நெடுநாள் இருப்பதற்காக. அவர் தொழிற்சாலையிலிருந்து போகும் போது இதைக் கவனிக்கவில்லை.
எனது பொத்தான் லெனினுடைய மற்ற பொத்தான்களிலிருந்து வேறானது. எனக்கோ ஒரே பெருமை. என்னுடைய இந்த இரகசியத்தை நான் ஒருவரிடமும் சொல்லவில்லை. வெகு காலம் கழிந்தது. ஒரு நாள் லித்தேய்னிய் வீதி வழியாகப் போகும்போது “பேனிக்ஸ்” நிழற்பட ஸ்டூடியோவில் லெனினுடைய பெரிதாக்கப்பட்ட படம் ஒன்றைக் கண்டேன். அவர் அதே மேல்கோட்டு அணிந்திருந்தார். கூர்ந்து கவனித்தேன். பொத்தான் அதேதான் - என்னுடையதேதான். அந்தப் பனிக்காலத்தில் லெனின் காலமானார்.
லித்தேய்னிய் வீதிக்குப் போய் அந்த நிழற்படத்தை வாங்கி வந்தேன். என் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடிக்குப் பக்கத்தில் அதைச் சட்டம் போட்டு மாட்டியிருக்கிறேன். தினந்தோறும் அருகே போய் அதைப் பார்க்கிறேன், கண்ணீர் பெருக்குகிறேன். என் பொத்தான் தைத்தபடியே இருக்கிறது.
-அர்காங்கேல்ஸ்க்கில் குடும்பத் தலைவி நத்தோரவா சொன்னபடி எழுதப்பட்டது.
Book Details | |
Book Title | இவர்தான் லெனின் (Iverthan Lenin) |
Publisher | சிந்தன் புக்ஸ் (Chinthan Books) |
Pages | 216 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், communism | கம்யூனிசம், Marxism | மார்க்சியம், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |