Menu
Your Cart

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் | POCSO Act

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் | POCSO Act
-5 %
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் | POCSO Act
₹90
₹95
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார். எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார். காவல்துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரண பொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவுகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். காவல்துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரண பொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவுகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏதாவதொரு குற்றச்செயல் புரிந்ததில், சட்டப்படி அது குற்றமென்று எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அக்குற்றத்தைச் செய்திருக்கமாட்டேன் என ஒருவர் நிலைப்பாடு கொண்டால், அந்தப் பொருண்மைத் தவறு, பிழைபொறுத்தலுக்கு உரியதன்று. எனவே, சாதாரண பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் வாதிகள், சட்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களும் சட்டத்தை முழுமையாக மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ள, தாய்மொழியாம் தமிழில் சரியான, எளிமையான சட்ட நூல்கள் வெளிவருவது, இன்றைய இன்றியமையாத தேவையாகும். இப்போது வெளிவந்துள்ள சில சட்டத் தமிழ் நூல்களைப் படித்தால், ஏதோ ஒரு கடினமான வேற்றுமொழியில் சட்டத்தைக் கற்பதுபோன்று மிகுந்த குழப்பம் உண்டாகிறது. மேலும், அத்தகைய நூல்களில், மிக அதிகமான பொருள்பிழைகளும் உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கி அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுவது, தீர்ப்பை வழங்குவது என நீதிமன்ற-மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, 20 மாதங்களாக மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முப்பெரும் சட்டங்களான (1) இந்திய தண்டனைச் சட்டம், (2) இந்திய சாட்சியச் சட்டம், (3) குற்ற விசாரணை முறைச் சட்டம், மற்றும் (4) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றை பொருளில் பிழையேதும் இல்லாமல், மிகச் சரியான, எளிதில் சட்டத்தைப் புரிந்துகொள்ளும்படியான தமிழ்நடையில் மொழிபெயர்த்து, சட்டம் மட்டுமே கொண்ட மேற்கண்ட சட்ட நூல்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன.
Book Details
Book Title பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் | POCSO Act (Protection of Children from Sexual Offences Act)
Author வீ.சித்தண்ணன் Bsc, M.L., CC & IS (Vee.Siththannan Bsc, M.L., Cc & Is)
Publisher ஜெய்வின் பதிப்பகம் (Jeywin Publications)
Year 2018
Edition 1
Format Paper Back
Category Law Books | சட்டப் புத்தகங்கள், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காவல் புலன்விசாரணை (அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்) - வீ. சித்தண்ணன் : - இரண்டு பாகங்கள்           இந்நூலில்     2005, 2008, 2010 & 2013 -ம் ஆண்டுகளின் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் உள்ளடக்கியது. 14/11/2012 அன்று அமலுக்கு வந்த "பாலியல..
₹1,425 ₹1,500
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்பட..
₹380 ₹400
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்பட..
₹570 ₹600
தமிழ்நாட்டின் நீதிபரிபாலனத்துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; கீழமை நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள் அல்லாது, உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்..
₹214 ₹225