Menu
Your Cart

புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி
-5 %
புயலிலே ஒரு தோணி
ப.சிங்காரம் (ஆசிரியர்)
₹323
₹340
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே.  புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.
Book Details
Book Title புயலிலே ஒரு தோணி (Puyalilae Oru Thoni Kalachuvadu Pathippagam)
Author ப.சிங்காரம் (P. Singaram)
ISBN 97899352440337
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 296
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ..
₹171 ₹180
புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்..
₹285 ₹300
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது... ப. சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவர..
₹333 ₹350
கடலுக்கு அப்பால் நாவல், இரண்டாம் உலக யுத்த கால நெருக்கடிகளின் பின்புலத்தில் ஓர் அழகிய காதல் கதையை ஊடு-பாவாகக் கொண்டது. செட்டிதெரு ஆ.சி. வயி. வயிரமுத்துப்பிள்ளை லேவா-தேவிக் கடை அடுத்தாளான செல்லையா, முதலாளியின் சொல்லை மீறி இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவன். நேதாஜியின் திடீர் மரணத்தை அடுத்து, இந்திய ..
₹95 ₹100