Menu
Your Cart

நண்டு மரம்

நண்டு மரம்
-5 %
நண்டு மரம்
இரா.முருகன் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழுத்தாளருக்குரியது. சிறந்த வாசகனைக் கோரி நிற்பது. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. சில கதைகள் ஓர் எழுத்தாளன் சோதனை செய்து பார்க்கும் வகையைச் சார்ந்தவை. இவையே சிறுகதைகளின் எல்லைகளை விரிவாக்கும் வல்லமை கொண்டவையாகவும் இருக்கின்றன. மாய யதார்த்தம் என்பதை தமிழில் வெற்றிகரமாகக் கையாண்ட சொற்ப எழுத்தாளர்களில் இரா.முருகன் முக்கியமானவர். கோட்பாடுகளுக்கு இடையே கலை சிக்கிவிடக்கூடாது என்ற தெளிவை இவரது படைப்புகளில் காணலாம். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அதற்கு மேலும் ஒரு நிரூபணம். * இரா. முருகன், 1953 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். இவருடைய முதல் கவிதை 1977ஆம் ஆண்டும், முதல் சிறுகதை 1984ஆம் ஆண்டும் கணையாழியில் வெளிவந்தன. நூறுக்கும் மேற்பட்ட சிறுகதை-கள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழி பெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
Book Details
Book Title நண்டு மரம் (Nandu Maram)
Author இரா.முருகன் (R.Murugan)
ISBN 9788184937329
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 296
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மூன்று விரல்..
₹204 ₹215
லண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்த..
₹171 ₹180
ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்..
₹166 ₹175
கவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் முக்கிய மைல்கல். மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்..
₹594 ₹625